For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அப்ப ஒன்னு.. இப்ப ஒன்னு... மாற்றி மாற்றி பேசும் பிரகாஷ்ராஜ்!

நடிகர்களின் அரசியல் பிரவேசம் குறித்து பிரகாஷ்ராஜ் இரண்டு வேறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் தற்போது முன்னணி நடிகர்கள் பலரும் கட்சி தொடங்கி அரசியலில் குதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ரஜினி, கமல், விஷால் என வரிசையாக வந்து கொண்டு இருக்கிறார்கள்.

நடிகர்களின் அரசியல் பிரவேசம் குறித்து பிரகாஷ்ராஜ் இரண்டு வேறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார். சென்ற முறை சொன்ன கருத்திற்கு அவரே இந்த முறை எதிராக பேசியுள்ளார்.

இந்த முறை நடிகர்களின் அரசியல் பிரவேசத்திற்கு ஆதரவாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

எதிர் பேச்சு

எதிர் பேச்சு

நடிகர்கள் அரசியல் பிரவேசம் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் சில நாட்களுக்கு பேசினார். பெங்களூரில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் ''நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டிற்கு பேரழிவை உண்டாக்கும். நடிகர்கள் அரசியல் கட்சியில் சேருவதையும் விரும்பவில்லை. அவர்கள் கட்சி தொடங்க கூடாது.'' என்று கூறினார்.

சேர மாட்டேன்

சேர மாட்டேன்

மேலும் அப்போது அரசியலுக்கு வர காத்திருந்த நடிகர் கமல்ஹாசனையும், நடிகர் ரஜினிகாந்தையும் இவர் நேரடியாக தாக்கி பேசினார். ''கமல்ஹாசன் தொடங்கும் கட்சியில் நான் எப்போதும் சேரப்போவதில்லை. உபேந்திரா, ரஜினி என யார் தொடங்க போகும் கட்சிக்கும் நான் ஆதரவு அளிக்க மாட்டேன்'' என்று வெளிப்படையாக பேசி இருந்தார்.

புதிய கருத்து

புதிய கருத்து

தற்போது இதற்கு மாறாக இவரே பேசியுள்ளார். இன்று நடந்த ஒரு தனியார் பத்திரிக்கை நிகழ்வில் பேசிய அவர் ''நடிகர் கமல், ரஜினி, விஷால் ஆகிய மூவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் அவர்கள் ஒன்றாக இணைந்து அரசியல் செய்ய வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

ஒரே குழப்பம்

ஒரே குழப்பம்

பிரகாஷ்ராஜ் ஒவ்வொரு முறையும் இப்படி மாற்றி மாற்றி பேசுவது அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சினிமா துறையில் இருக்கும் நபர்கள் கூட இவர் பேசுவது புரியாமல் குழம்பிக் கொண்டு இருக்கிறார்கள். கில்லி படத்தில் குழறி பேசி அவர் குழம்புவது போல இப்போது மக்களை குழம்ப வைத்து இருக்கிறார்.

English summary
Prakash Raj takes double stand in actors political entry. Initially he didn't want actors to participate in politics now he says that Rajini, Kamal and Vishal should join together and do politics in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X