For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

7 மாதமாக கர்ப்பத்திற்கான சிகிச்சை.. கடைசியில் பார்த்தால் வெறும் "கட்டி".. சென்னை ஷாக்!

சென்னை கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் வயிற்றில் கட்டியிருந்த இளம் பெண் ஒருவருக்கு 7 மாத காலம் கர்ப்பிணி என நினைத்து சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை : கர்ப்பிணி என்று மருத்துவமனையில் உறுதி செய்ய பின்னர் பல மாதங்கள் சிகிச்சை கொடுத்து சீமந்தம் எல்லாம் நடத்திய பின்னர், வயிற்றில் இருப்பது குழந்தை அல்ல, கட்டி என்று மருத்துவர்கள் தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர். மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்தவர் ஹசினா,28. இவருக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாக குழந்தை இல்லாத காரணத்தால், சிகிச்சை பெறுவதற்காக சென்னைக்கு வந்தார். திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் ஜனவரி மாதம் குழந்தையின்மைக்கு சிகிச்சை பெற வந்த அவருக்கு வயிற்றில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டு, லேப்ராஸ்கோப்பி மூலம் கட்டி அகற்றப்பட்டது. அதன் பின்பு தொடர் சிகிச்சையில் இருந்த அவர் கர்ப்பம் அடைந்துள்ளதாக ஏப்ரல் மாதம் சிறுநீர் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

Pregnancy status shocks woman

மருந்து, மாத்திரைமருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி, மாதந்தோறும், அந்த மருத்துவமனையில், தொடர்ந்து, கர்ப்ப கால சிகிச்சை பெற்று வந்தார். மேலும், மருத்துவர்கள் ஆலோசனைப்படி, மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். நவம்பர் 8 தேதியை, பிரசவ நாளாகவும், டாக்டர்கள் குறித்து கொடுத்துஉள்ளனர். அந்த நாளில், அவருக்கு பிரசவ வலி ஏற்படவில்லை.

வாக்குவாதம்இதையடுத்து, அவரை பரிசோதித்த டாக்டர்கள், அசீனாவிற்கு, 'ஸ்கேன்' செய்து பார்த்து,வயிற்றில் குழந்தையுடன், கட்டி ஒன்றும் வளர்ந்து வருகிறது. எனவே, நவம்பர் 18ம் தேதி, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்' என கூறியுள்ளனர். அன்றைய தினம், ஹசீனா மருத்துவமனை செல்லவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம், அவருக்கு திடீரென வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றார். அங்கு, அவருக்கு, மீண்டும், 'ஸ்கேன்' எடுத்து பார்த்ததில், அவரின் வயிற்றில் கட்டி மட்டும் உள்ளது உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கணவரும், உறவினர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக ஹசினாவின் சகோதரி நஸ்ரத் செய்தியாளர்களிடத் பேசினார்.

கர்ப்பம் அடைந்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாதந்தோறும் இதே மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அசினா வந்தார். 5 மற்றும் 7-ஆவது மாதத்தில் மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போதும் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அசினாவுக்கு சீமந்தமும் நடைபெற்றது. நவம்பர் 8ம் தேதி மருத்துவமனைக்கு சென்றபோது, சுகப்பிரசவம் ஆவதற்கு வாய்ப்பில்லை என்று கூறி, 18ம் தேதி அறுவைச் சிகிச்சை செய்ய வரும்படி கூறினர்.

அதனையடுத்து நவம்பர் 14ம் தேதி மருத்துவமனைக்குச் சென்றபோது, வயிற்றில் குழந்தையும் உள்ளது கட்டியும் உள்ளது என்று தெரிவித்தனர். இதனையடுத்து ஹசினா, வந்தவாசிக்குச் சென்றார். வந்தவாசியில் வைத்து அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து அங்கிருந்த தனியார் மருத்துவமனைக்கு 20ம் தேதி கொண்டு சென்றோம். அங்கு ஸ்கேன் பரிசோதனையில் வயிற்றில் குழந்தை இல்லை கட்டிதான் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் கஸ்தூர்பா காந்தி அரசு மருத்துவமனைக்கு 21ம் தேதி ஹசினாவைக் கொண்டு வந்தோம். மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்த பின்பு மருத்துவர்கள் வயிற்றில் குழந்தை இல்லை கட்டி மட்டுமே உள்ளது என்று தெரிவித்தனர். இத்தனை நாள்களை கர்ப்பம் என்று கூறி சிகிச்சை அளித்த மருத்துவர்கள், இப்போது கட்டி என்று கூறுகின்றனர். தற்போது மனதளவில் மிகவும் உடைந்துபோய் இருக்கிறோம் என்றார்.

ஹசினா முறையாக பரிசோதனைக்கு வரவில்லை என்பதால் அவரை கண்காணிக்க இயவில்லை என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் விஜயா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ஏப்ரல் மாதம் இவர் கர்ப்பம் தரித்தது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அது பலவீனமான கருவாக இருந்தது. தொடர்ந்து மருத்துவமனையில் பரிந்துரைத்த ஸ்கேன் உள்ளிட்டப் பரிசோதனைகளை அவர் முறையாகச் செய்யவில்லை. ஒருமுறை பரிந்துரை எழுதிக் கொடுக்கும் புத்தகத்தை, அடுத்த முறை அவர் கொண்டு வருவதில்லை. இதனால் தொடர்ந்து கண்காணிக்க இயலாமல் போய்விட்டது என்று கூறினார். தற்போது அவரது வயிற்றில் 3 செ.மீ. அளவில் சிறிய கட்டி உள்ளது. அதனை மாத்திரைகள் மூலமே கரைத்துவிடலாம். மாதவிடாய் சுழற்சிக்காக அவருக்கு தற்போது மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் டாக்டர் விஜயா கூறியுள்ளார்.

English summary
Haseena Ameer Ali of Kannagi Nagar has been married for seven years. Her sister, M. Nasrath, said that on April 11 this year, Haseena had tested positive for pregnancy at Kasturba Gandhi Government Hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X