For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆம்பூரில் எதிர்வீட்டினர் கேலி செய்ததால் கர்ப்பிணிப் பெண் தற்கொலை : உறவினர்கள் போராட்டம்

எதிர்வீட்டினர் கேலி செய்ததால் கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆம்பூரில் எதிர்வீட்டினர் கேலி செய்ததால் கர்ப்பிணிப் பெண் தற்கொலை- வீடியோ

    ஆம்பூர் : ஆம்பூரில் எதிர்வீட்டினர் கேலி கிண்டல் செய்ததால் மனமுடைந்த கர்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் அவரது உறவினர்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வேலூர் மாவட்டம் ஆம்பூர் மளிகைதோப்பு பகுதியை சேர்ந்தவர் பைரோஸ் மனைவி கௌசர் . 3 மாத கர்ப்பிணி பெண்ணான இவர் கடந்த இரு தினங்களுக்கு முன் எதிர் வீட்டில் வசிக்கும் ஷகிலா என்பவரின் மகள் அம்ரீன் புதுப்புடவை அணிந்திருப்பதை பார்த்து நானும் இந்த புடவை கட்டிக்கொண்டால் நல்லா இருக்கும் என ஷகிலா மற்றும் அவரது மகள் அம்ரீனிடம் தெரிவித்துள்ளார்.

    Pregnant Women commit suicide because of Teasing

    இதற்கு ஷகிலாவின் குடும்பத்தினர் கெளசரை தரக்குறைவாக பேசி கேலி கிண்டல் செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த கௌசர் கடந்த 9ம் தேதி அன்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .

    இது குறித்து ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் கௌசரின் உறவினரான அபீஸ், கெளசரை கேலி கிண்டல் செய்து தற்கொலைக்கு தூண்டிய ஷகிலா மற்றும் அவரது மகள் அம்ரீன் ,மருமகள் ஷேகா ஆகியோரை கைது செய்ய கோரி புகார் அளித்துள்ளார்.

    புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததால் ஆத்திரமடைந்த கௌசரின் உறவினர்கள் காவல் நிலையம் முன்பு மண்ணெண்ணெய் கேனுடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    இதனால் ஆம்பூர் நகர காவல்நிலையம் மற்றும் பஜார் பகுதியில் 5௦ க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கபட்டனர் .சுமார் 1 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதாக உறுதி அளித்த பின்னர் போராட்டத்தைக் கைவிட்டனர்.

    English summary
    Pregnant Women commit suicide because of Teasing. Ambur Women commit suicide because of neighbors teasing and their relatives protest against police.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X