For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அவர் சகாயம் அல்ல.. நம்ம "கேப்டன்"தான்.. கோவையில் கலகலப்பூட்டிய பிரேமலதா

Google Oneindia Tamil News

கோவை: கோவையில் நடந்த தேமுதிக மாநாட்டில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா பேசிய பேச்சு தொண்டர்களை வெகுவாகக் கவர்ந்தது.

மனைவி பிரேமலதா பேசுவதை விஜயகாந்த்தும் ஆர்வமாக கவனித்து வந்தார்.

Premalatha dubs Sagayam as Vijayakanth

கோவையில் தேமுதிகவின் 11வது ஆண்டு விழா நடந்தது. அதில் கலந்து கொண்டனர் விஜயகாந்த்தும், பிரேமலதாவும். இந்த மாநாட்டில் பிரேமலதா பேசிய பேச்சிலிருந்து சில சுவாரஸ்ய துளிகள்...கிரானைட் குவாரி மோசடிகளை விசாரித்து வரும் சகாயம், நியாயத்தை நிலை நாட்ட அமாவாசை இரவில் மயானத்தில் படுத்து தூங்குகிறார்.

  • அந்த காட்சியை நான் டி.வி.யில் பார்த்தேன். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், சகாயம் எனக்கு கேப்டனை போல தெரிகிறார்.
  • நியாயத்தை நிலை நிறுத்த சகாயம் போராடி வரும் அதே மதுரை மண்ணில் பிறந்த விஜயகாந்த் தான் அவருக்கு உதாரணமாக இருக்கிறார்.
  • சகாயத்துக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். தேமுதிக ஆட்சிக்கு வந்தால் தவறான அதிகாரிகள் களையெடுக்கப்பட்டு, சகாயம் மாதிரியான நேர்மையான அதிகாரிகள் தான் இருப்பார்கள்.
  • விஜயகாந்த் நடித்த படங்கள் தான் போலீசாருக்கு பாடங்களாக உள்ளன. போலீஸ் அகடாமியில் விஜயகாந்த்தின் படங்கள் தான் போட்டு காட்டப்படுகிறது என்றார் பிரேமலதா.

அங்கே என்ன தெரிகிறது?

பிரேமலதா இவ்வாறு சீரியஸாக பேசிக் கொண்டிருந்தபோது அருகே அமர்ந்திருந்த விஜயகாந்த், தனக்கு எதிரில் இருந்தவர்களிடம் சைகை மொழியில் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். படு சீரியஸாக அவரது சைகை மொழி உரையாடல் இருந்தது. அவர் என்ன பேசினார், என்ன சொல்ல வந்தார் என்று தெரியவில்லை. ஆனால் விஜயகாந்த் பேசியதை அவருக்கு அருகே அமர்ந்திருந்தவர் ரொம்பவே ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

இந்த சைகை உரையாடலைப் பார்த்தபோது "சுறா" படத்தில் இசைக் கச்சேரி நடத்தும் வெண்ணிற ஆடை மூர்த்தியைப் பார்த்து வடிவேலு சைகையில் பேசுவாரே.. அதுதான் ஞாபகத்திற்கு வருகிறது!

English summary
DMDK leader Vijayakanth's wife Premalatha dubbed IAS officer Sagayam as Vijayakanth as he is fighting against the corruption
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X