For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தரும் தேமுதிக... கூட்டணி பற்றி அந்த நேரத்தில் முடிவு

Google Oneindia Tamil News

சென்னை: சட்டமன்றத் தேர்தல் கூட்டணி பற்றி அந்த நேரத்தில் முடிவை அறிவிப்போம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை கூறினார்.

தற்போது அதிமுக, பாஜக கூட்டணியில் தேமுதிக அங்கம் வகித்து வரும் நிலையில், பிரேமலதா விஜயகாந்தின் இந்த கருத்து அதிமுக தலைமைக்கு கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் அளித்துள்ளது.

மேலும், அண்மையில் நடைபெற்ற தேமுதிக உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டத்திலும் அதிமுகவை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் குட்ட குட்ட குனியமாட்டோம் என அவர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிராமணர் பிரஷாந்த் கிஷோரிடம் சரணடைவது தொண்டர்கள் மேல் உள்ள அவநம்பிக்கையா? ஸ்டாலினுக்கு பாஜக கேள்விபிராமணர் பிரஷாந்த் கிஷோரிடம் சரணடைவது தொண்டர்கள் மேல் உள்ள அவநம்பிக்கையா? ஸ்டாலினுக்கு பாஜக கேள்வி

மக்களவைத் தேர்தல்

மக்களவைத் தேர்தல்

கடந்த மக்களவைத் தேர்தலில் தேமுதிகவின் தேவையை அறிந்து திமுக, அதிமுக, பாஜக, உள்ளிட்ட கட்சிகள் தேடிச்சென்று கூட்டணிக்கு அழைத்தன. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் விஜயகாந்த் வீட்டிற்கே சென்று கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார். திமுக தரப்பிலும் முழு மரியாதையுடன் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் எல்லோருக்கும் பெப்பே காட்டி வந்த தேமுதிக, இறுதியில் ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் பின்னர் அது குறித்த தகவலை துரைமுருகன் ஊடகங்களிடம் உடைத்த பின்னர், வேறுவழியின்றி அதிமுக-பாஜக கூட்டணியில் ஐக்கியமானது தேமுதிக.

மனமில்லை

மனமில்லை

மக்களவைத் தேர்தல் நாள் நெருங்கியதால் அப்போது மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அதிமுக கொடுத்த குறைந்த சீட்டுகளை பெற்றுக்கொண்டது தேமுதிக. ஆனால் கேட்ட எண்ணிக்கையில் சீட் பெற முடியவில்லையே என்ற ஆதங்கமும், கோபமும் தேமுதிகவுக்கு இருந்து வந்தது. இந்நிலையில் இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருந்த அதிமுக மீண்டும் விஜயகாந்தை வீடு தேடிச் சென்று ஆதரவு கோரியது. விஜயகாந்தும் அதிமுகவுக்கு பெருந்தன்மையோடு ஆதரவு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், தனது உடல்நிலையை பற்றி கூட கவலைப்படாமல் அதிமுக வேட்பாளருக்காக விக்கிரவாண்டியில் அரைநாள் பிரச்சாரம் செய்தார்.

கூட்டணி விரிசல்

கூட்டணி விரிசல்

இப்படி அதிமுகவுடன் சுமூக உறவை பேண நினைத்த தேமுதிகவுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலில் உரிய இட ஒதுக்கீடு தராதது அதிமுக மீது மீண்டும் கோபத்தை ஏற்படுத்தியது. இதன் வெளிப்பாடகாவே அண்மைக்காலமாக அதிமுக அரசை பற்றி விமர்சிக்கத் தொடங்கினார் பிரேமலதா விஜயகாந்த். மேலும், இப்படியே சென்றால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் நமக்கான முக்கியத்துவம் கிடைக்காது என மேல்மட்ட நிர்வாகிகள் சிலர் பிரேமலதா விஜயகாந்திடம் வருத்தப்பட்டுள்ளனர். இதன் எதிரொலியாகவே நாங்கள் குட்ட குட்ட குனியமாட்டோம் எனப் பேசி அதிமுகவுக்கு ஹைவோல்ட் ஷாக் கொடுத்தார் அவர்.

அந்த நேரத்தில்

அந்த நேரத்தில்

இதனிடையே சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, கூட்டணி தர்மத்தை கடைபிடித்து தேமுதிக நடப்பதாகவும், ஆனால் தங்களை போல் அனைத்துக் கட்சிகளும் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார் . இது அதிமுகவை மனதில் வைத்து அவர் கூறிய வார்த்தைகள். மேலும், சட்டமன்றத் தேர்தல் கூட்டணி பற்றி அந்த நேரத்தில் கலந்து பேசி முடிவை அறிவிப்போம் எனக் கூறினார். இது தான் அதிமுகவுக்கு அவர் அளித்துள்ள அதிர்ச்சி வைத்தியமாக பார்க்கப்படுகிறது.

English summary
premalatha vijayakanth says, assembly election alliance decide at that time
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X