For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Breaking News: ரஜினி அதிமுக தலைவராக வாய்ப்பே இல்லை - செல்லூர் ராஜு

அண்ணா பல்கலைக்கழக தேர்வுத்தாள் மறுமதிப்பீடு மோசடியில் இன்னும் பலருக்கு தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக தலைமைப் பொறுப்புக்கு ரஜினிகாந்த் வரும் வாய்ப்பே இல்லை. தொண்டனாக முடியும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

அதிமுக தலைமைப் பொறுப்புக்கு ரஜினியை குறுக்கு வழியில் கொண்டு வர முயற்சிகள் நடப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. இதுகுறித்து அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேட்கப்பட்டது.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கட்சியில் யார் வேண்டுமானாலும் சேரலாம். ஆனால் தொண்டனாக சேர்ந்துதான் கட்சிக்காக உழைத்து படிப்படியாக உயர முடியும். அது ரஜினியாக இருந்தாலும் சரி, கமலாக இருந்தாலும் சரி. இதுதான் நடைமுறை. நேரடியாக தலைமைப் பொறுப்புக்கு வாய்ப்பே இல்லை என்று கூறினார் ராஜு.

Newest First Oldest First
5:50 PM, 5 Aug

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, முதல்வர் பழனிச்சாமி சந்திப்பு

இந்திரா பானர்ஜியை இல்லத்தில் சென்று சந்தித்தார் முதல்வர் பழனிச்சாமி

உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்தார்

இந்திரா பானர்ஜி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்

5:09 PM, 5 Aug

அமெரிக்காவில் விஜயகாந்த்

குடும்பத்தினருடன் அமெரிக்காவில் விஜயகாந்த் உள்ள படங்கள் வெளியீடு

உற்சாகத்தில் உள்ள தேமுதிகவினர்

3:55 PM, 5 Aug

கருணாநிதி அவர்களைச் சென்னையில் சந்தித்தேன் - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

கருணாநிதியின் குடும்பத்தார், மருத்துவரிடம் உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன் -குடியரசுத் தலைவர்

கலைஞர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்-குடியரசுத் தலைவர்

2:22 PM, 5 Aug

சென்னை வந்தடைந்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க உள்ளார்

விமான நிலையத்தில் இருந்து காவேரி மருத்துவமனை செல்கிறார் குடியரசு தலைவர்

11:05 AM, 5 Aug

பாமக நிறுவனர் ராமதாஸ் சேலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு

எடப்பாடி பழனிசாமி அரசின் மீது ஊழல் பட்டியலை வாசித்தார் ராமதாஸ்

எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் ஊழல் அதிகரித்துள்ளது

5000 கோடி மதிப்பிட்டில் நெடுஞ்சாலை ஒப்பந்தம் வழங்குவதில் ஊழல்

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வில் ஊழல், குட்கா ஊழல்

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பெருகியது வளர்ச்சியா? ஊழலா? ராமதாஸ் கேள்வி

9:50 AM, 5 Aug

ரஜினி விரைவில் முழு நேர அரசியலில் ஈடுபடுவார்- சத்யநாராயணா பேட்டி

திருப்பத்தூர் அருகே பாப்பாத்தியம்மன் கோயில் ஆடி வெள்ளி விழா

கிருஷ்ணகிரியில் தாய்-தந்தைக்கு கோயில் கட்டப்பட்டுள்ள நிலையில் திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்பு

2.0 படம் நவம்பர் மாதம் 29-ஆம் தேதி வெளிவருகிறது

9:29 AM, 5 Aug

அண்ணா பல்கலைக்கழக தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு புகார்

பெரிய அளவிலான மோசடியில் மேலும் பலர் சிக்க வாய்ப்பு

விரிவடைந்து வருகிறது லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

9:28 AM, 5 Aug

திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க குடியரசுத் தலைவர் இன்று வருகை

இன்று மதியம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வருகை

9:28 AM, 5 Aug

தமிழகத்தில் முருகன் கோயில்களில் ஆடிக் கிருத்திகை விழா கோலாகலம்

முருகனின் அறுபடை வீடுகளில் காவடியுடன் குவிந்த பக்தர்கள்

English summary
There will be more persons involved in Anna University Scandal as the IT raids are expanded.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X