For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அர்ச்சகர்கள் தெய்வீகமாக பூஜை செய்யவில்லை.. ரோபோக்கள் போல் செயல்படுகின்றனர்.. ஹைகோர்ட் வேதனை!

அர்ச்சகர்கள் ரோபோக்கள் போல் பணியாற்றுகிறார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: அர்ச்சகர்கள் தெய்வீகமாக பணியாற்றாமல் ரோபோக்கள் போல் பணியாற்றுகிறார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் புன்னைவனநாதர் சன்னதியில் லிங்கத்தை பூஜிக்கும் மயில் சிலை மாயம் என மனு அளிக்கப்பட்டது. வாயில் பூவுடன் கூடிய மயில் சிலைக்கு பதில், பாம்புடன் உள்ள சிலை வைக்கப்பட்டது.

சிலை மாறியது தொடர்பாக அறநிலையத்துறை விசாரணை நடத்தி வருகிறது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மயில் சிலை காணாமல் போனதாக வழக்கு தொடரப்பட்டது.

சிலை மாயம்

சிலை மாயம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் புன்னை வனநாதர் சன்னதியில் காணாமல் போன மயில் சிலைக்கு பதில் புதிய சிலை அமைத்து கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிடக்கோரி சென்னை ஹைகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

 அர்ச்சகர்களுக்கு பொறுப்புண்டு

அர்ச்சகர்களுக்கு பொறுப்புண்டு

இந்நிலையில் சிலை மாயமானது தொடர்பான பொதுநல வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோவிலில் சிலைகளை பாதுகாப்பதில் அர்ச்சகர்களுக்கு பொறுப்பு உண்டு என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தெய்வீக பணிகள்

தெய்வீக பணிகள்

இந்த வழக்கில் சிலை மாறியிருப்பதை அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்வது அர்ச்சகரின் கடமை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அர்ச்சகர்கள் தெய்வீக பணிகளை சரியாக ஆற்ற வேண்டுமெனவும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ரோபோக்கள் போல்

ரோபோக்கள் போல்

அர்ச்சகர்கள் தெய்வீகமாக பணியாற்றாமல் ரோபோக்கள் போல் பணியாற்றுகிறார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

4 வாரங்களுக்கு ஒத்தி வைப்பு

4 வாரங்களுக்கு ஒத்தி வைப்பு

அறநிலையத்துறை அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

English summary
The Madras High Court has said that the priests are working as robots without working divinely.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X