For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இளவரசர் ஸ்டாலின் அரசராகி விட்டார்: குஷ்பூ ட்விட்டரில் வாழ்த்து

ஸ்டாலினுக்கு குஷ்பு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து- வீடியோ

    சென்னை: ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பூ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    திமுகவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    குஷ்பூ ட்விட்டர்

    குஷ்பூ ட்விட்டர்

    ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் மகிழ்ச்சிகரமான வாழ்த்தினை ஸ்டாலினுக்கு அறிக்கைகள், சமூகவலைதளங்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் குஷ்பூவும் தனது வாழ்த்தை சொல்லியுள்ளார்.

    திமுகவில் குஷ்பூ

    திமுகவில் குஷ்பூ

    திமுகவில் இருந்தபோது, மு.க.ஸ்டாலின் குறித்து சில கருத்துக்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர் குஷ்பு. இதனால் குஷ்பு வீட்டை திமுக தொண்டர்கள் தாக்கி அந்த சம்பவம் பெரும் பரபரப்பானது.

    கருணாநிதிக்கு இரங்கல்

    கருணாநிதிக்கு இரங்கல்

    இந்த நிகழ்வுக்கு பிறகு குஷ்பு திமுவிலிருந்து விலகி காங்கிரசில் சேர்ந்து, அங்கு அவருக்கு கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. குஷ்பூ காங்கிரசில் இருந்தாலும், திமுக மீது அவ்வப்போது கருத்துக்களையும், விமர்சனங்களையும் பதிவிட்டு வந்துள்ளார். கருணாநிதி மறைவின்போதும் அவரது இரங்கலை வருத்தத்தோடு தெரிவித்தார். இந்நிலையில், திமுக தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

    இளரவசர் அரசரானார்

    அந்த பதிவில் ‘'இளவரசர் அரசராகிவிட்டார். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகள். தமிழக மக்கள் தங்களின் எதிர்காலமாக உங்களைப் பார்க்கிறார்கள். விரைவில் மாநிலத்தை வழிநடத்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம், நாம் ஒன்றாக இணைந்து நின்றோம். தொடர்ந்து இணைந்திருப்போம், வாழ்த்துகள்'' என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Prince has become king: Kushboo congratulate to Stalin
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X