For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தன் நாக்கை தானே கடித்துக் கொண்ட கைதி – காரணம் தெரியாமல் அதிகாரிகள் முழிப்பு

Google Oneindia Tamil News

நாகை: நாகர்கோவில் ஜெயிலில் தனக்கு தானே நாக்கை கடித்து கைதி செய்த ரகளையால் ஜெயில் அதிகாரிகள் ஆடிப்போயுள்ளனர்.

குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள மேற்கு நெய்யூரை சேர்ந்தவர் விஜயகுமார்.

கடந்த 8 ஆம் தேதி ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரிக்கு வந்த இவருக்கும், மருத்துவமனை காவலாளி ஒருவருக்கும் மோட்டார் சைக்கிளை நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டது.

போலீஸார் கைது:

போலீஸார் கைது:

இதில் விஜயகுமார் தன்னை தாக்கியதாக காவலாளி சின்னதம்பி கொடுத்த புகாரின் பேரில் ஆசாரிபள்ளம் போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர். பின்னர் விஜயகுமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

அலறிய கைதி:

அலறிய கைதி:

இந்தநிலையில், இன்று அதிகாலை 2.20 மணிக்கு விஜயகுமார் அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயில் அதிகாரிகள் உடனடியாக அங்கு சென்று பார்த்தனர். அப்போது விஜய குமாரின் உதட்டில் இருந்து ரத்தம் வழிந்தோடிய வண்ணம் இருந்தது.

நாக்கு போச்சே! :

நாக்கு போச்சே! :

ஜெயிலில் அதிகாரிகள் அறைக்குள் சென்று விஜயகுமாரிடம் என்ன நடந்தது என விசாரித்த போது அவர் தனக்கு தானே நாக்கு, மேல் உதட்டை பலமாக கடித்தது தெரிய வந்தது.

தீவிர சிகிச்சை:

தீவிர சிகிச்சை:

உடனே ஜெயில் அதிகாரிகள் விஜய குமாரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரகளையோ ரகளை:

ரகளையோ ரகளை:

மருத்துவமனையிலும் விஜயகுமார் கைவிலங்கை அவிழ்க்க முயன்றதோடு, சக நோயாளிகளை தாக்க முயன்று ரகளை செய்து வருவதாகவும், எனவே அவரை பாளையில் உள்ள ஜெயில் கைதிகளுக்கான மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணையில் போலீஸ்:

விசாரணையில் போலீஸ்:

மேலும், விஜயகுமார் திடீரென இவ்வாறு நடந்து கொள்வதற்கு என்ன காரணம் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

English summary
Prisoner bites his own tongue and admitted in hospital for treatment. Police didn’t find out the reason for his activity.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X