For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தனியார் பாலில் சோப்பு ஆயில்... நடவடிக்கை எடுக்க அரசு முடிவு

மதுரையில் இலவச பால் பரிசோதனை முகாம் இன்று நடந்தது. அதில் ஒரு தனியாரின் பால் மாதிரியில் சோப்பு ஆயில் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

By Devarajan
Google Oneindia Tamil News

மதுரை : பால் பரிசோதனை மண்டல முகாம் இன்று நடைபெற்றது. தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் குற்றச்சாட்டை தொடர்ந்து, மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக இனறு இலவச முகாம் நடைபெற்றது.

பால் உற்பத்தியாளர்கள், பால் விற்பனையாளர்கள், பாக்கெட் பால், கறவை மாடுகள், உள்ளிட்டவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில், 108 மாதிரிகள் இன்று நடத்தப்பட்டது. உணவு பாதுகாப்புத் துறை சார்பாக, 28 குழுக்கள் அமைக்கப்பட்டு, மதுரை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில், ஆய்வு செய்யப்பட்டன.

 Private milk producer from Madurai added detergent oil and distributed to the locals in Madurai

ஒரே ஒரு மாதிரி மட்டும் டிடெர்ஜன்ட் அல்லது சோப்பு எண்ணெய் கலந்திருப்பதும், கொழுப்பு மற்றும் ரசாயன கலப்பு பற்றியும் இதில் ஆய்வு செய்யப்பட்டது. மதுரை கோச்சடை பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட தனியார் பால் மாதிரியில் சோப்பு ஆயில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது . அது தொடர்பான அறிக்கையை சமர்பிக்க மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது பற்றி கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 'தனியார் பால் நிறுவனங்கள் இதுபோன்று கலப்படம் செய்வது வருத்தம் அளிக்கிறது' என்று தெரிவித்துள்ளார்.

English summary
Private milk producer from Madurai added detergent oil and distributed to the locals in Madurai. He fails the adulteration test conducted by madurai district administration today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X