For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காலியாக கிடக்கும் அதிகாரிகள் பணியிடம்... உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் சிக்கல்

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் அதிகாரிகள் பணியிடம் காலியாக இருப்பதால் அங்கு உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் 36 பேரூராட்சிகள் உள்ளன. இதில் சங்கரன்கோவில், வடக்கு வள்ளியூர், மணிமுத்தாறு, குற்றாலம் ஆகியவை சிறப்பு நிலை பேரூராட்சிகளாகும். மற்றவை தேர்வு நிலை பேரூராட்சிகளாக உள்ளன.

இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் 19 பேரூராட்சிகள் உள்ளன. இதில் திருச்செந்தூர் சிறப்பு நிலை பேரூராட்சியாகும். மற்றவை தேர்வு நிலை பேரூராட்சிகள்.

காலியிடம்...

காலியிடம்...

இதில் 55 பேரூராட்சிகளில் 10 பேரூராட்சிகள் நிர்வாக அதிகாரி பணியிடம் காலியாக இருந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் குற்றாலம், வடக்கு வள்ளியூர், மணிமுத்தாறு, சங்கர்நகர், ஆய்க்குடி, தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், கானம், தென்திருப்போரை, பெருங்குளம் ஆகிய 10 பேரூராட்சிகளில் அதிகாரிகள் பணியிடம் காலியாக இருந்து வருகிறது. இதனால் இந்த பேரூராட்சிகளின் பொறுப்பு இதர அதிகாரிகளிடம் கூடுதலாக ஓப்படைக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல்...

உள்ளாட்சித் தேர்தல்...

தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி காலம் அக்டோபர் மாதம் 23ம் தேதி முடிவடைகிறது. உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை பிரித்து மாநில தேர்தல் ஆணையத்திடம் ஓப்படைக்கப்பட்டுள்ளது.

நிர்வாக அதிகாரிகள்..

நிர்வாக அதிகாரிகள்..

உள்ளாட்சி தேர்தலை அந்தந்த பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள்தான் நடத்த வேண்டும். அறிவிப்பு வெளியிடுதல், வாக்காளர் பட்டியல் வெளியிடு, வேட்பு மனு பெறுதல், பரீசிலனை, ஏற்று கொள்ளுதல் என அனைத்து பணிகளும் நிர்வாக அதிகாரிகள் செய்ய வேண்டும்.

சிக்கல்...

சிக்கல்...

இந்நிலையில் நிர்வாக அதிகாரி பணியிடம் காலியாக இருந்து வருவதால் உள்ளாட்சி தேர்தலை எப்படி நடத்த முடியும் என இதர அதிகாரிகள் கைபிசைத்து வருகின்றனர்.

English summary
As many government postings are vacant in Nellai district, there is a problem in conducting local body election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X