For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதுச்சேரி உலகத் தொல்காப்பிய மன்றத்தில் பேராசிரியர் ப. அருளியின் சிறப்புரை!

Google Oneindia Tamil News

புதுச்சேரி: உலகத் தொல்காப்பிய மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின் சார்பில் தொல்காப்பியம் குறித்த ஐந்தாம் தொடர்பொழிவு, புதுச்சேரி நீட இராசப்பையர் தெருவில் உள்ள செகா கலைக்கூடத்தில் இன்று (04.05.2016) புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெறுகின்றது.

இதில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னைப் பேராசிரியர் சொல்லாய்வறிஞர் ப. அருளி கலந்துகொண்டு, தொல்காப்பியம் உரியியல் என்ற தலைப்பில் உரையாற்றுகின்றார்.

Prof Aruli to address in World Tholkappiya Mandram today

முனைவர் ப. பத்மநாபன் வரவேற்புரையாற்றவும், முனைவர் மு.இளங்கோவன் அறிமுக உரையாற்றவும் உள்ளனர். பேராசிரியர் ம.இலெனின் தங்கப்பா தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரான்சிலிருந்து வருகைதரும் கவிஞர் கி. பாரதிதாசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்கின்றார். திருவண்ணாமலைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அருள்வேந்தன் பாவைச்செல்வி வாழ்த்துரை வழங்க உள்ளார்.

புதுவைப் பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் அரங்க. மு. முருகையன் நன்றியுரை வழங்க உள்ளார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் புதுச்சேரி உலகத் தொல்காப்பிய மன்றத்தின் பொறுப்பாளர்கள் செய்துள்ளனர். தமிழார்வலர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

தொடர்புக்கு: 9443658700 / 9442029053

நன்றி: http://muelangovan.blogspot.com

English summary
Former professor of Tamil varsity, Prof Aruli will address in World Tholkappiya Mandram today at Puducherry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X