For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் காமாட்சி அம்மன்...ஏவ்.. எல்லோரும் வரணும்.. ஏவ்.. கோர்ட் வாசலை கலங்கடித்த நிர்மலா தேவி!

கோர்ட்டிலும், கோர்ட் வளாகத்திலும் நிர்மலாதேவி உளறியபடியே இருந்தார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Nirmala Devi medidation | நீதிமன்றத்திலிருந்து வெளியேற மறுப்பு! தியானம் செய்யும் நிர்மலா தேவி-வீடியோ

    ஸ்ரீவில்லிப்புத்தூர்: தன் முடியை தானே வெட்டி, காதிலும் அதை தொங்க விட்டு கொண்டு, "கீழே சிவப்பு கலர்ல இந்த பேன்ட்டை போட்டுக்கிட்டு, மேலே இந்த புடவையை கட்டியிருக்கிறேன். பூ வெச்சிருக்கேன்" என்று பேச ஆரம்பித்த நிர்மலாதேவியை தமிழகம் முழுக்க மக்கள் குழப்பத்துடன் பார்த்து வருகிறார்கள்.

    வழக்கம்போல் பளபளவென புடவை, தலைநிறைய மல்லிகைப்பூ, கழுத்து நிறைய நகைகளுடன் கோர்ட்டுக்கு வந்திருந்தார் நிர்மலாதேவி. கோர்ட்டுக்குள் வழக்கறிஞருடன் பேசிக் கொண்டே சென்றார்.

    அப்போது, "கீழே சிவப்பு கலர்ல இந்த பேன்ட்டை போட்டுக்கிட்டு, மேலே இந்த புடவையை கட்டியிருக்கிறேன். பூ வெச்சிருக்கேன்" என்று சொல்லி பேன்ட், பூ, புடவையை சுட்டிக் காட்டுகிறார். வழக்கு விசாரணை முடிந்துவிட்டு வெளியே வரும்போது, வாசற்படியிலேயே ஹேண்ட் பேக்கை வைத்து கொண்டு உட்கார்ந்துவிட்டார்.

    உட்கார கூடாது

    உட்கார கூடாது

    அங்கிருந்த நபர், "இங்கே ஏன் உட்கார்றீங்க? முன்னாடி போய் உட்காருங்க" என்கிறார். உடனே பையை தூக்கி கொண்டு அங்கிருந்து எழுகிறார் நிர்மலா. திரும்பவும் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொள்கிறார். அங்கே உட்காரக்கூடாது என்று இன்னொருவர் சொல்லியும் கேட்காமல், "இங்கதான் என்னை உட்கார சொல்லி இருக்காங்க" என்று சொல்லி உட்கார்ந்துவிட்டார்.

    வீடியோ

    வீடியோ

    சிறிது நேரம் கைகளை கூப்பி, கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்கிறார். பிறகு எதைஎதையோ தனக்குத்தானே முணுமுணுக்கிறார். இதை அங்கிருந்த நிறைய பேர் பார்த்து கொண்டே செல்கிறார்கள் செய்தியாளர்கள் இதை வீடியோவாக படம் பிடிக்க துவங்கி விட்டனர். இங்கே உட்காரகூடாது என்று சொல்லி கோர்ட் வளாக பெஞ்சில் உட்கார வைக்கிறார்கள். அப்போது தன்னுடைய முடியை தானே வெட்டி, அதை காதில் தொங்க விட்டு கொண்டார். கண்களை மூடிக்கொண்டு தெளிவாக பேச ஆரம்பித்தார். அதன் முழு விவரம் இதுதான்:

    சாமி கிட்ட கேட்டேன்

    சாமி கிட்ட கேட்டேன்

    "நான்தான் காமாட்சி அம்மன். இப்போ தீர்ப்பு வந்துருச்சு. சந்தோஷமா இருக்கு. பட்டாசு வெடிச்சிட்டாங்க. வெளிஉலகத்துக்கு தனியா தெரியறேன். ஆனா எல்லார்கூடயும் நான் மனரீதியா பேசிட்டுதான் இருக்கேன். எங்க பாவாங்க ரெண்டு பேருக்கும் முடி ரொம்ப நீளமா இருக்கணும்ன்னு ஆசை. சாமிக்கிட்டே கேட்டேன். தரேன்னு சொல்லி இருக்காங்க. வர்றப்போ அதுக்குண்டான பரிகாரங்கள் காரில் வெச்சு காமாட்சி அம்மன் செய்ய சொன்னாங்க. அதை செஞ்சிருக்கேன். கோர்ட் வாசல்ல அந்த முடியை போட சொன்னாங்க.

    அருள் வாக்கு

    அருள் வாக்கு

    அனேகமாக கிட்டத்தட்ட முடி நீளமா வந்துடும். எந்த அளவுக்கு வரும்ன்னா, நான் அம்மா கிட்டது முழங்கால் அளவு முடி கேட்டேன். அம்மா எனக்கு அருள் குடுத்திருக்கிறது கையில் இப்படி போட்டு, முடி தரையில படர்ந்து வர்ற அளவுக்கு தரேன்னு சொல்லிட்டு ஆசை குடுத்திருக்காங்க. கண்டிப்பா குடுப்பாங்க. அதே மாதிரி இன்னொன்னும் கேட்டிருக்கேன், எதுக்காக கேட்டிருக்கேன்னா, எங்க குடும்பத்துல, எங்க வீட்டுக்காரங்க, அத்தை, மாமா, அப்பா, அம்மா, எனக்காக எதிரிகளால சாகடிக்கப்பட்ட எல்லாரும் வந்து கூப்பிட்டேன்.

    செத்துட்டாங்க

    செத்துட்டாங்க

    நைட் பூஜை செஞ்சேன். அப்போதான் எனக்கே விவரம் தெரியும். நிறைய பேர் இறந்திருக்காங்க. காலேஜ் குழந்தைங்க நெறைய பேர் இறந்திருக்காங்க. தூக்கு போட்டு கொஞ்சம் பேர் இறந்திருக்காங்க. பவித்ரா, அர்ச்சனா, இவங்க எல்லாம் இறந்திருக்காங்க. இவங்க எல்லாம் 3-ம் வருஷ மாணவிகள். இவங்க எம் மேல கம்ப்ளைன்ட் பண்ணவங்க.

    பூஜை

    பூஜை

    இதையெல்லாம் நான் பேசல, காமாட்சி அம்மன் பேசறாங்க. அருப்புக்கோட்டையில இருக்கக்கூடிய காமாட்சி அம்மன் கோயிலுக்கு நேத்து சாயங்காலம் நான் பூஜை பண்ண போனேன். நேத்து காலைல 5.30 சரவணபாண்டி பவா என்னை எழுப்பி விட்டார். குத்துவிளக்கேத்தி சாமி கும்பிடுன்னு சொன்னார்" என்றார்.

    ஏப்பம்

    ஏப்பம்

    இதெல்லாம் சொல்லி முடிக்கும்வரை நிர்மலாதேவி கண்களை திறக்கவே இல்லை. அதே சமயத்தில் அடிக்கடி ஏப்பம் விட்டுக் கொண்டே இருந்தார். நடுவில் திடீரென அழுதார். அவர் பேச பேச, உடன் இருந்தவர்கள் குறுக்கு கேள்விகளை கேட்டபடியே இருந்தனர். அதையும் காதில் வாங்கி கொண்டு பதில் சொன்னார் நிர்மலாதேவி.

    English summary
    Professor Nirmala Devi becomes Samiyar and acts weird in Srivilliputhur Court campus. This video goes viral on socials now
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X