For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு சிபிசிஐடிக்கு அதிரடியாக மாற்றம்

பேராசிரியர் நிர்மலா தேவி தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    நிர்மலா தேவி வழக்கு சிபிசிஐடிக்கு அதிரடியாக மாற்றம்- வீடியோ

    அருப்புக்கோட்டை: பேராசிரியர் நிர்மலா தேவி தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக போலீஸ் டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

    அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி , மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள உயரதிகாரிகளின் ஆசையை பூர்த்தி செய்ய 4 மாணவிகளிடம் செல்போனில் படுக்கைக்கு அழைக்கும் ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து நிர்மலா தேவியை கைது செய்ய வேண்டும் என்று மாணவர்களும் மாதர் சங்கங்களும் கல்லூரி முன்பு போராட்டம் நடத்தின. இதையடுத்து கல்லூரி முதல்வரின் புகாரின் பேரில் போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    வெளியே வர மறுப்பு

    வெளியே வர மறுப்பு

    அருப்புக்கோட்டை கவிதா நகரில் உள்ள அவரது வீட்டுக்கு ஏடிஎஸ்பி மதி தலைமையிலான போலீஸாரும் வட்டாட்சியிர் சிவ கார்த்தியாயினியும் சென்றனர். ஆனால் அவர் வீட்டை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு வெளியே வர மறுத்துவிட்டார்.

    பூட்டை உடைத்து கைது

    பூட்டை உடைத்து கைது

    இதையடுத்து 7 மணி நேரத்துக்கு பிறகு நிர்மலா தேவியின் கணவர், சகோதரர் ஆகியோரை வரவழைத்து அவர்கள் முன்னிலையில் பூட்டை உடைத்த போலீஸார் நிர்மலா தேவியை கைது செய்தனர்.

    2-ஆவது நாளாக விசாரணை

    2-ஆவது நாளாக விசாரணை

    பேராசிரியர் நிர்மலா தேவியிடம் இருந்து 3 செல்போன்கள், சிம்கார்டுகள், மெமரி கார்டுகளை போலீஸார் கைப்பற்றினர். மேலும் அந்த செல்போனில் பல்வேறு பெண்களின் புகைப்படங்களை அவர் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளார்.

    முக்கியத்துவம்

    இந்த விவகாரத்தில் தம்மை நிர்பந்தித்த மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகள் யாரென்பதை நிர்மலா தேவி போலீஸாரிடம் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து வழக்கின் முக்கியத்துவம் கருதி இந்த வழக்கை அருப்புக்கோட்டை நகர காவல் நிலையத்திலிருந்து சிபிசிஐடிக்கு மாற்ற தமிழக டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

    English summary
    Professor Nirmala Devi's case transferred to CBCID who has trapped in inviting students to share bed with Madurai Kamarajar University higher officials.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X