For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு - ஏர்வாடியில் 3வது நாளாக பேராட்டம்

Google Oneindia Tamil News

நெல்லை: விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏர்வாடியில் மூன்றாவது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடந்து வருகிறது.

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் இந்தாண்டு விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் அங்குள்ள அம்மன் கோவில் வாளகத்தில் விநாயகர் சிலை வைத்து பூஜைகள் நடந்தது. ஆனால் அனுமதியின்றி சிலை வைக்கப்பட்டதாக கூறி போலீசார் விநாயகர் சிலையை அப்புறப்புடுத்தி நாங்குநேரி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

Protest continues for 3rd day in Erwadi

இதனை கண்டித்து இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பால் மாரியப்பன் தலைமையில் பாஜவினர் மற்றும பொதுமக்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் அம்மன்கோவிலில் தங்கியிருந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏர்வாடி லட்சுமி நரசிம்மநாடார் தெருவில் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்காததால் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.

இன்று மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபடடவர்கள் கோயில் வாளகத்திலேயே சமைத்து சாப்பிட்டு வருகி்ன்றனர்.

இந்த நிலையில் இன்று சேரன்மகாதேவி சப் கலெக்டர் அலுவலத்தில் சமாதான கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் கலந்து ஆலோசனை நடத்தி விட்டு பிறகு முடிவு தெரிவிக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

நாளை விநயாகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கினால் போராடடம் வாபஸ பெறப்படும். இல்லையென்றால் போராட்டம் தொடரும் என்று இந்து முன்னனியினர் அறிவித்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவுகிறது.

English summary
In Erwadi the Hindu munnani and public are continuing their protest for the third day demanding to give permission for vinayakar chathurthi rally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X