For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயங்கொண்டம் அருகே மதுக்கடையை அகற்றக்கோரி பெண்கள் சாலைமறியல்... போக்குவரத்து பாதிப்பு! - வீடியோ

ஜெயங்கொண்டம் அருகே குடியிருப்பு பகுதியில் இருக்கும் மதுக்கடையை அகற்றக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Google Oneindia Tamil News

பெரம்பலூர்: ஜெயங்கொண்டம் அருகே குடியிருப்பு பகுதியில் இருக்கும் மதுக்கடையை அகற்றக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம் அருகே உள்ளது கோடாலி கருப்பூர் கிராமம். இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

Protest near Jayankondam against tasmac

இந்நிலையில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அரசு மதுக்கடையை திறந்துள்ளது. இதனால் அப்பகுதி இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகும் ஆபத்து உருவாகியுள்ளது.

பொது மக்களுக்கு இடையூறாக உள்ள அந்த மதுக்கடையை அகற்றக்கோரி அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் கும்பகோணம் - ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வட்டாசியர் ஒரு வாரத்தில் மதுக்கடையை அகற்றப்படும் என உறுதியளித்தார்.

இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஒரு வாரத்தில் மதுக்கடையை அகற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்றும் அவர்கள் எச்சரித்தனர

English summary
Near in Jayankondam public did road blockad against tasmac. They to remove the tasmac immidiatly. Heavy traffic jam occured due to this protest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X