For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்... ஸ்டாலின் திட்டவட்டம்

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்-வீடியோ

    சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று செய்தியளார்களை சந்தித்தார். அப்போது பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் ஆளுநர் பன்வாரிலால் அவரது கன்னத்தை தட்டிக்கொடுத்தார்.

    ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆளுநரை கண்டித்து திமுக சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர்.

    ஆளுநர் மன்னிப்பு

    ஆளுநர் மன்னிப்பு

    இதைத்தொடர்ந்து பெண் பத்திரிக்கையாளரிடம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மன்னிப்பு கோரியுள்ளார். நல்ல கேள்வி கேட்டதால் பத்திரிக்கையாளரை தனது பேத்தியாக நினைத்து தான் கன்னத்தில் தட்டியதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

    ஸ்டாலின் குற்றச்சாட்டு

    ஸ்டாலின் குற்றச்சாட்டு

    இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது குடியரசுத் தலைவர் ஆட்சியை போல் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செயல்படுகிறார் என குற்றம்சாட்டினார்.

    புரோகித் தகுதியற்றவர்

    புரோகித் தகுதியற்றவர்

    பத்திரிக்கையாளரின் கன்னத்தை தட்டியது தமிழகத்திற்கு பெரும் தலைக்குனிவு என்றும் ஸ்டாலின் சாடினார்.ஆளுநர் பொறுப்பில் இருக்க பன்வாரிலால் புரோகித் தகுதியற்றவர் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    போராட்டம் தொடரும்

    போராட்டம் தொடரும்

    நாகரிகமற்ற நிலையில் பெண் நிருபர் கன்னத்தை ஆளுநர் தட்டியுள்ளார். எனவே ஆளுநர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்றும் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

    English summary
    DMK working president Stalin says Protest will be continue untill Governor resigns his post.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X