For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மவுலிவாக்கம் 11 மாடி கட்டடம் இடித்து தரைமட்டமானது வேதனை அளிக்கிறது - விஜயகாந்த்

மவுலிவாக்கம் 11 மாடி கட்டடம் இடிப்பால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடு வழங்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: மவுலிவாக்கம் 11 மாடி கட்டடம் இடித்து தரை மட்டம் ஆக்கப்பட்டது மிகவும் வேதனை அளிக்கிறது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டிடம் இடித்து தரை மட்டம் ஆக்கப்பட்டது மிகவும் வேதனைக்குரியது. வெளிநாடுகளில் உள்ளவர்கள் பல வானவிலாவிய அடுக்குமாடி கட்டிடங்களை சர்வசாதரணமாக கட்டி சாதனை படைத்துக் கொண்டுள்ளனர்.

provide compensation for the victims of moulivakkam building collapse - vijayakanth

ஆனால் சென்னையில் வெறும் 11 மாடி கட்டவே உரிய திட்டமிடுதலோ, தரமோ இல்லாததன் விளைவு, கட்டிட இடிப்பு சம்பவம் நம் தமிழ்நாட்டின் நிலையை உலக அளவில் மிகவும் அவமானத்தை உண்டாக்கி இருக்கிறது. ஒன்றை உருவாக்குவது தான் கடினம், அழிப்பது மிகவும் எளிது.

நேற்றைய தினம் மாலை அனைத்து தொலைகாட்சிகளிலும் ஏறக்குறைய மூன்று மணிநேரம் ஏதோ கின்னஸ் சாதனை நிகழ்வு நடப்பது போன்று நேரலையில் தமிழ்நாட்டின் தரத்தையும், மானத்தையும், கப்பல் ஏற்றிய நிகழ்வாகவே அமைந்தது. இந்த கட்டிடம் இடிப்பதற்கு யார் காரணம்?. இந்த கட்டிடத்தை கட்ட அனுமதித்தது யார்?. பல ஆண்டுகளாக கட்டப்படும் இந்த கட்டிடத்திற்கு உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா? என்ற பல கேள்விகள் மக்கள் மனதில் தோன்றுகிறது.

இந்த கட்டிடம் இடிப்பதற்கு முன்பு எத்தனை ஊழல்கள் நடந்துள்ளது என்பதை இந்த அரசும், பத்திரிக்கைகளும், ஊடகங்களும், மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். ஆதாயம் பெற்ற ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். தங்கள் முதலீடுகளை இந்த கட்டிடத்தில் செலுத்தியுள்ள குடும்பங்கள் செய்வதறியாது விழிபிதுங்கி உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு தொகையை இந்த அரசு ஏற்று, அந்த குடும்பங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க செய்ய வேண்டும்.

மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் இனி தமிழகத்தில் நடக்காவண்ணம் அதிகாரிகளை இந்த அரசு எச்சரித்து வழிமுறை படுத்த வேண்டும். இந்த 11 மாடி கட்டிடம் வெறும் செங்கல், கம்பி, சிமிண்ட் ஆகியவற்றின் ஒட்டுமொத்த கலவையாக மட்டும் பார்க்க இயலாது. அதன் பின் எத்தனை பேருடைய உழைப்பு, நேரம், முதலீடு, எதிர்கால கனவு, ஆகிய அனைத்தையும் அளிக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு கட்டிடமாக இருந்தாலும் அனுமதி தருவதற்கு முன்பே ஒழுங்கு படுத்தி சரியாக திட்டமிட்டு யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் வராமல் வழிவகை செய்யவேண்டும். மேலும் இன்னும் இதுபோல் பல அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டவேண்டும் அப்போழுதான் உலக தரத்திற்கு இணையாக தமிழ்நாடு பேசப்படும். ஊழல் இல்லாதா நேர்மையான அரசு வரும்போதுதான் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்பதை மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்" என்று அந்த அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

English summary
Dmdk leader vijayakanth urged to state government provide compensation for the victims of moulivakkam building collapse
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X