For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வியாழக்கிழமை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் - நாளை கவுண்டவுன் - வீடியோ

கடல்சார் ஆராய்ச்சிக்காக பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் 31ஆம் தேதி அனுப்பப்படுகிறது. இதற்கான கவுண்டவுன் நாளை ஆரம்பமாகிறது.

By Suganthi
Google Oneindia Tamil News

Recommended Video

    பி.எஸ்.எல்.வி சி39 ராக்கெட் கவுண்டவுன் நாளை தொடக்கம்-வீடியோ

    ஶ்ரீஹரிகோட்டா: ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் 31ஆம் தேதியன்று விண்வெளியில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான 29 மணி நேர கவுண்ட்டவுன் நாளை தொடங்குகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் மூலம் கடல்சார் ஆராய்ச்சிக்கான செயற்கைகோள் விண்ணுக்கு அனுப்பட உள்ளது. ஏற்கனவே இந்த வரிசையில் 6 செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டுள்ளது. இது 7ஆவது செயற்கை கோளாக வரும் 31ஆம் தேதி அனுப்பப்பட உள்ளது.

    PSLV c-39 rocket launch count down starts from tomorrow

    அந்த செயற்கை கோளை அனுப்பும் 29 மணிநேர கவுண்டவுன் நாளை தொடங்குகிறது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த செயற்கைகோள் மூலம் இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க இயலும்.

    இந்த செயற்கைகோளை இந்தியாவிலேயே வடிவமைத்துள்ளனர். தற்போது ராக்கெட்டின் பாகங்கள் பொருத்தப்பட்டு அதற்கு எரிபொருள் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    English summary
    PSLV c-39 rocket launch count down starts from tomorrow in ISRO
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X