ஷாக்கிங்.. 1997ம் ஆண்டுக்குப் பிறகு தோல்வியைச் சந்தித்துள்ள பிஎஸ்எல்வி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இதுவரை மொத்தம் 39 மிஷன்களை பிஎஸ்எல்வி ராக்கெட் சந்தித்துள்ளது. அதில் ஒரு முறை முழுமையான தோல்வியையும், ஒருமுறை பகுதி அளவு தோல்வியையும் சந்தித்துள்ளது. கடைசியாக 1997ம் ஆண்டு தான் பிஎஸ்எல்வி மிஷன் தோல்வி அடைந்தது. அதன் பிறகு இப்போது நடந்திருப்பது விஞ்ஞானிகளை அதிர வைத்துள்ளது.

அதை விட கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதிதான் 104 வெளிநாட்டு செயற்கைக் கோள்களை சுமந்து பிஎஸ்எல்வி சி38 வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆனால் இன்று நடந்த சி39 ராக்கெட் தோல்வி அடைந்திருப்பது விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிஎஸ்எல்வியின் 39 மிஷன்களில் இது 3வது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது. செயற்கைக் கோள் மற்றும் ராக்கெட் தொழில்நுட்பத்தில் மிகப் பெரிய முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் கண்டு வரும் நிலையில் திடீரென இன்று சறுக்கல் ஏற்பட்டிருப்பது கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

1993ம் ஆண்டு

1993ம் ஆண்டு

1993ம் ஆண்டு முதல் பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்பட்டது. பிஎஸ்எல்வி டி 1 ராக்கெட் முழுத் தோல்வியைச் சந்தித்தது. அது முதல் முயற்சி என்பதால் நமது விஞ்ஞானிகளுக்கு அது பல பாடத்தைக் கற்றுக் கொடுத்தது. அதன் பின்னர் இரு முறை வெற்றி பெற்றனர்.

1997ல் கடைசித் தோல்வி

1997ல் கடைசித் தோல்வி

அதன் பின்னர் 1997ம் ஆண்டு பகுதி அளவு தோல்வியை பிஎஸ்எல்வி சந்தித்தது. இதுதான் பிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகள் சந்தித்த கடைசித் தோல்வியாக இருந்தது. அதன் பின்னர் நடந்த அத்தனை மிஷன்களும் வெற்றி பெற்று இந்தியாவுக்கு ஏற்றத்தைக் கொடுத்தன.

2015ல் சாதனை

2015ல் சாதனை

2015ம் ஆண்டு இந்தியா 17 வெளிநாட்டு செயற்கைக் கோள்களை முதல் முறையாக விண்ணில் செலுத்தி, புவி வட்டப் பாதையில் சரியாக நிலை நிறுத்தி அசத்தியது.

சந்திரயான் 1

சந்திரயான் 1

பிஎஸ்எல்வியின் சாதனைகளில் முக்கியமானது சந்திரயான் 1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியதுதான் (2008). அதேபோல இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வு கலமான அஸ்டிரோசாட்டையும் பிஎஸ்எல்விதான் ஏவியது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சறுக்கல்

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சறுக்கல்

இப்படி வெற்றி நடை போட்டு வந்த பிஎஸ்எல்வி தற்போது திடீர் தோல்வியைச் சந்தித்திருப்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது. இஸ்ரோவுக்கு இன்றைய நாள் பெரும் சோக நாளாக மாறி விட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Today is a black day for ISRO as its PSLV C39 rocket mission partially failed due to the technical snag in its heat shield.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற