For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இங்கிலாந்தின் 5 செயற்கைக் கோள்களுடன் இன்று விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி ராக்கெட்

Google Oneindia Tamil News

சென்னை: ஐந்து பிரிட்டிஷ் செயற்கைக் கோள்களுடன் ஏவப்படும் பிஎஸ்எல்வி எக்ஸ்எல் ராக்கெட்தான் இந்தியாவின் மிக எடை அதிகமான ராக்கெட் லான்ச் ஆகும் என்று இஸ்ரோ தலைவர் கிரண் குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இந்த ராக்கெட்தான் அதிக அளவிலான எடை கொண்ட எரிபொருளுடன் செலுத்தப்படுகிறது. மேலும் இந்த வகையான ஏவுதல் மிகவும் எளிமையானது என்பதால் வர்த்தக ரீதியில் இதைப் பயன்படுத்தி் கொள்ள பலநாடுகளும் விரும்புகின்றன' என்றார்.

PSLV-XL launch is the heaviest commercial payload undertaken by Isro, says chairman

மேலும், ‘இது வர்த்தக நோக்கிலான ஏவுதலாகும். இங்கிலாந்தைச் சேர்ந்த ஐந்து செயற்கைக் கோள்கள் இதில் ஏவப்படுகின்றன. இது ஐந்தாவது வர்த்தக ரீதியிலான ஏவுதலாகும். மேலும் இதுவரை இல்லாத அதிக எடை கொண்ட ஏவுதலும் இதுவாகும்' என அவர் தெரிவித்துள்ளார்.

இன்று இரவு ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து இரவு 9.58 மணிக்கு இந்த ராக்கெட் ஏவப்படுகிறது. இதற்கான கவுன்ட்டவுன் புதன்கிழமை காலை 7.38 மணிக்குத் தொடங்கியது என்பது நினைவிருக்கலாம்.

இந்த செயற்கைகோள்களின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

English summary
Indian Space Research Organisation (Isro) chairman Kiran Kumar has said that the launch of the PSLV-XL (Polar Satellite Launch Vehicle-XL variant), with five British satellites on board, is the heaviest commercial payload undertaken by the organisation, adding that various nations are coming to them because their launches are commercially viable.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X