For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிவி சின்னம் ஒதுக்கக் கோரி புதிய தமிழகம் வழக்கு

By Mayura Akilan
|

சென்னை: புதிய தமிழகம் கட்சிக்கு "தொலைக்காட்சி பெட்டி" சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு "நட்சத்திரம்" சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், புதிய சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

PT files plea the HC for allotment of Symbol

இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சி்யின் தலைவர் கிருஷ்ணசாமி, தனது கட்சிக்கு தொலைக்காட்சி பெட்டி சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். ஆனால், அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

English summary
The Madras High Court on Thursday postpone a petition filed by the Pudhiya Tamilagam, for a direction to the Election Commission to allot the party the TV symbol in the Lok Sabha election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X