For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென்மாவட்ட சாதிக்கொலைகள் பற்றி சிறப்பு புலனாய்வு விசாரணை தேவை: டாக்டர் கிருஷ்ணசாமி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தென்மாவட்டங்களில் நடைபெறும் சாதிக்கொலைகளைப்பற்றி சட்டசபையில் பேசி அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து புதியதமிழகம் கட்சியின் எம்.எல்.ஏ டாக்டர் கிருஷ்ணசாமி இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

தமிழக சட்டசபையின் குளிர்காலக்கூட்டத்தொடர் மூன்றாவது நாளக இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை அவை தொடங்கியதும் எதிர்கட்சியினர் சத்துணவு முட்டை கொள்முதல் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மான கொண்டு வந்து பேசினர்.

எதிர்கட்சிகளின் புகாருக்கு சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி விளக்கம் அளித்தார்.

PT leader Krishnasamy stages walkout in TN Assembly

முன்னதாக தென்மாவட்டங்களில் நடைபெற்றுவரும் கொலைகள் பற்றி பேசுவதற்கு புதிய தமிழகம் கட்சியின் எம்.எல்.ஏ டாக்டர் கிருஷ்ணசாமி அனுமதி கோரினார்.

இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணசாமி வெளிநடப்புச் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்மாவட்டங்களில் 6 மாதங்களில் 71 கொலைகள் நடந்துள்ளன. இது குறித்து அவையை ஒத்திவைத்து பேச அனுமதி கோரினேன், சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார்.

விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட சாதிக்காரர்களின் ஆதிக்கம் நிலவுகிறது

71 பேர் கடந்த 6 மாதங்களில் கொலை செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு புலானாய்வு விசாரணை செய்யவேண்டும் என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.

English summary
Puthiya Tamizhagam member Dr.Krishnasamy today staged a walkout in the Tamil Nadu Assembly, after the Speaker declined to permit him to raise 71 murders in South district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X