For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக அணியில் புதிய தமிழகம் எம்.எல்.ஏவா? 30-ந் தேதி க்ளைமாக்ஸ்

By Mathi
Google Oneindia Tamil News

PT Mla Ramasamy to support ADMK?
சென்னை: புதிய தமிழகம் கட்சியின் எம்.எல்.ஏவான நிலக்கோட்டை ராமசாமி அதிமுக பக்கம் தாவிவிட்டாரா என்பதை 30-ந் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் போது தெரிந்து கொள்ளலாம் என்று அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

புதிய தமிழகம் கட்சிக்கு ஒட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ.,வும், அக்கட்சியின் தலைவருமான கிருஷ்ணசாமி மற்றும் நிலக்கோட்டை எம்.எல்.ஏ., ராமசாமி என இரு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.

ஆனால் அண்மைக்காலமாக கிருஷ்ணசாமிக்கும் ராமசாமிக்கும் இடையே மன வருத்தம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வாய்ப்பு கிடைத்தால் அதிமுகவை ஆதரிப்பேன் என்று பகிரங்மாகவே ராமசாமி தெரிவித்திருந்தார்.

அண்மையில் நடைபெற்ற சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி வெளிநடப்பு செய்த போது, ராமசாமி அமைதியாக சபையிலேயே உட்கார்ந்திருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ராமசாமியும் கிருஷ்ணசாமியும் நானே என்று டாக்டர் கிருஷ்ணசாமி பதிலளித்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, எங்கள் கட்சியின் நிலக்கோட்டை எம்.எல்.ஏ., ராமசாமி, அ.தி.மு.க., பக்கம் சென்று விட்டார் என, கூறுகின்றனர். அவர், புதிய தமிழகம் கட்சியில் நீடிக்கிறாரா, இல்லையா என்பது இம்மாதம், 30ந் தேதி, கட்சியின் சார்பில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தெரிந்துவிடும். அவர், கட்சியில் நீடிக்கிறார் என்றால், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார் என்றார்.

ஆக 30-ந் தேதி க்ளைமாக்ஸ் இருக்கிறது..

English summary
Puthiya Thamizhagam leader Dr Krishnaswamy said, we should celar on his party MLA Ramasamy's stand to support ADMK coming 30th.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X