For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துடைப்பம் வேணாம் போ போ... வியாபாரி என நினைத்து விரட்டப்பட்ட ஆம் ஆத்மி வேட்பாளர்

|

சேலம்: துடைப்பம் விற்க வந்த வியாபாரி என நினைத்து சேலத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர் விரட்டப் பட்ட சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் லோக்சபா தொகுதி ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக கம்ப்யூட்டர் என்ஜினீயர் சதீஷ்குமார்(வயது30) போட்டியிடுகிறார். இவர் நேற்று தனது கட்சியினருடன் சேலம் கடைவீதியில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர்கள் தங்கள் கட்சிச் சின்னமான துடைப்பங்களை கையில் ஏந்தியபடி வாக்கு சேகரித்தனர்.

ஒவ்வொருவரிடமும் சென்று துடைப்பத்தைக் காட்டி ஆம் ஆத்மிக்கே வாக்களியுங்கள் என அவர்கள் கேட்டபடிச் சென்றனர். அதன்படி, ஒரு கடையின் அருகில் அமர்ந்திருந்த பெண் ஒருவரின் அருகில் சென்ற வேட்பாளர் தனது கையில் இருந்த துடைப்பங்களைக் காட்டி, ‘அக்கா... துடைப்பம் நமது சின்னம், மறந்துடாதீங்க' எனக் கூற முற்பட்டுள்ளார்.

ஆனால், அவரை முந்திக் கொண்ட அந்தப் பெண், துடைப்பம் வியாபாரம் செய்ய வந்த வியாபாரி என வேட்பாளரைத் தவறுதலாக புரிந்து கொண்டு, ‘துடைப்பம் வேண்டாம் தம்பி' எனத் தெரிவித்துள்ளார்.

Public identified AAP workers as broomstick merchants

உடனே சுதாரித்துக்கொண்ட சதீஷ்குமார், அந்த பெண்ணிடம், ‘ஆம் ஆத்மி கட்சி பற்றி தெரியுமா?' எனக் கேட்க, ஒன்றும் புரியாமல் முழித்துள்ளார் அப்பெண்.

அதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி பற்றி அப்பெண்ணுக்கு விளக்கம் அளித்துவிட்டு தங்களுக்கே ஓட்டளிக்கும் படி வேண்டுகோளும் விடுத்து சென்றுள்ளார் வேட்பாளர் சதீஷ்.

English summary
The AAP workers were mistakenly identified as broomstick merchants in Salem
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X