For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அப்படி என்னத்த கிழிச்சாங்களோ தெரியல.. எம்எல்ஏக்கள் சம்பள உயர்வுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு!

எம்எல்ஏக்களுக்கு தமிழக அரசு 100 சதவீத ஊதிய உயர்வு அளித்திருப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: எம்எல்ஏக்களுக்கு தமிழக அரசு 100 சதவீத ஊதிய உயர்வு அளித்திருப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஊதிய உயர்வு அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வறட்சி, தண்ணீர் தட்டுப்பாடு, வேலையில்லா திண்டாட்டம் என மக்கள் பெரும்பாடு பட்டு வருகின்றனர். இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண எடப்பாடி அரசு முன்வரவில்லை.

இந்நிலையில் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள எம்எல்ஏக்களுக்கு அள்ளிக்கொடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதற்கு பொது மக்கள் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த மகான்களுக்கல்ல..

உயர்த்திதரப்பட வேண்டியது விவசாயிகளுக்கும் அவர்கள் விற்கும் பொருளுக்குமே அன்றி வெறும் மேசை தட்டி அரசு பணத்தில் வாழும் இந்த மகான்களுக்கல்ல.. என்கிறது இந்த டிவீட்.

நல்லா இருக்கு உங்க சட்டம்...

கஷ்டப்படும் விவசாயிக்கு வருமானம் இல்லை கோடி கோடியாக சம்பாதிப்பவர்களுக்கு சம்பள உயர்வு நல்லா இருக்கு உங்க சட்டம்... என்கிறது இந்த டிவீட்

ஆதரவு தெரிவிப்பாங்க..

இதுக்கு மட்டும் எல்லா கட்சிகளும் ஆதரவு தெரிவிப்பாங்க பாருங்க..! எங்கள் கம்பெனியில் 5%கூட உயர்த்தமாட்டுறாங்க... என்கிறார் இந்த வலைஞர்

என்னத்த கிழிச்சாங்களோ

அப்படி என்னத்த கிழிச்சாங்களோ தெரியவில்லை என்கிறது.. இந்த டிவிட்..

பாவம் பிழைத்து போகட்டும்

பாமர மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் பாவம் பிழைத்து போகட்டும். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவார்கள் என மறைமுகமாக சாடுகிறது இந்த டிவீட்

நாங்களும் சும்மாதா இருக்கோம்

கொஞ்சம் பொறாமையாதான் இருக்கு நமக்கு ஒரு இன்கிரிமென்ட்டும் இல்லையே நாங்களும் சும்மாதா இருக்கோம் என்னமோ.. என்கிறது இந்த டிவீட்

பாவம் அனைவரும் ஏழைகள்

பாவம் அனைவரும் ஏழைகள்.... என மறைமுகமாக கண்டிக்கிறது இந்த டிவிட்

எதைக் கேட்டாலும் நிதியில்லை

அடபாவிகளா படித்தவனுக்கு வேலையில்லை எதைக் கேட்டாலும் நிதியில்லை இப்போ மட்டும் எங்கிருந்து வந்தது பணம் கேடுகெட்ட நாட்டில் எல்லாமே கேடாக முடியும் என்கிறது இந்த நெட்டிசன்

English summary
Netizens and public opposing for the salary hike for the Tamil Nadu MLAs. Public shows their anger on social media for the salary hike of MLAs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X