For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பணம் தரும் முன்பாக மூடப்பட்ட வங்கி.. வாடிக்கையாளர் போராட்டத்தால் பெண் ஊழியர் மயக்கம்

விழுப்புரம் அருகே வங்கியில் பணம் எடுக்க காத்திருந்தவர்கள், பணி நேரம் முடிந்துவிட்டதா கூறி கதவை மூடியதால் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பணம் எடுக்க வந்த அங்கன்வாடி ஊழியர் நெரிசலில் சிக்கி மயக்கமடை

Google Oneindia Tamil News

விழுப்புரம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணமெடுக்க காத்திருந்த மக்கள், திடீரென வங்கி மூடப்பட்டதால் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பணம் எடுக்க வந்த பெண் ஊழியர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது.

பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ஆம் தேதி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லது என அறிவித்தார். பழைய நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் பெரும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Public protest for closing bank in Vilupuram

இந்நிலையில் விழுப்புரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சம்பளப்பணத்தை எடுப்பதற்காக மக்கள் அதிகளவில் காத்திருந்தனர். அப்போது திடீரெ பணி நேரம் முடிந்துவிட்டதாக கூறி ஊழியர்கள் வங்கிக்கதவை மூடியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பணம் எடுப்பதற்காக வந்த அங்கன்வாடி ஊழியர் லட்சுமி பாய் திடீரென மயங்கி விழுந்தார்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியதோடு வங்கி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காத்திருந்தவர்கள் மறுநாள் பணம் பெற்றுக்கொள்ள டோக்கன் வழங்கப்படும் என்றனர். இதையடுத்து டோக்கனை பெற்றுக்கொண்டு மக்கள் கலைந்து சென்றனர்.

English summary
Public were protesting for closing bank when people were standing to get money. In this protest crowed a lady fainted. police arrived the spot and has spoken to bank managers to solve the issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X