For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெல்லையில் தொழிலாளர் நல அட்டையை விற்க முயற்சி... மக்கள் முற்றுகையால் பரபரப்பு

தூத்துக்குடி அருகே தொழிலாளர் நல வாரிய அட்டையை விற்க முயன்றவர்களை கிராம மக்கள் முற்றுகையி்ட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Google Oneindia Tamil News

தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே தொழிலாளர் நல வாரிய அட்டையை விற்க முயன்றவர்களை கிராம மக்கள் முற்றுகையி்ட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கான நல வாரிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. வழக்கமாக தபால் மூலமாக தொழிலாளர்களின் முகவரிக்கு நேரிடையாக இது அனுப்பப்படும்.

 Public seige the rural workers who tried to sell their card near Tuticorin

இந்நிலையில் கயத்தாறு அருகே உள்ள ராஜபுத்துக்குடி கிராமத்துக்கு மதியம் வந்த இருவர் அப்பகுதியை சேர்ந்த தொழிலாளர்களுக்கு நல வாரிய அட்டையை வழங்க தலா ரூ.100 கேட்டனர்.

இதை அறிந்ததும் கிராம மக்கள் அவர்களை முற்றுகையி்ட்டனர். இதையடுத்து அவர்களிடம் விசாரித்த போது அவர்களின் பெயர் பார்த்திபன், கணேஷ்குமார் என்பதும், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து இந்த அடையாள அட்டையை வாங்கி வந்ததாக அவர்கள் கூறினர்.

மேலும் ரூ.100 பெற்று கொண்டு அவற்றை வழங்கி வருமாறு அலுவகத்தினரே கூறியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் வைத்திருந்த அட்டையை பறிமுதல் செய்த கிராம மக்கள், இருவரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

English summary
Public seige the rural workers who tried to sell their card near Tuticorin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X