For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாராயக் கடைகள் மூலம் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் இலக்கு: புதுவை அமைச்சர் நமச்சிவாயம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் சாராயக் கடை மூலம் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் இதெல்லாம் வெறும் வார்த்தைக்கு மட்டும்தான். ஏனேனில் புதுவை மாநிலத்தை பொறுத்த வரை மதுவிலக்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை என முதல்வர் ரெங்கசாமி தெளிவாக கூறிவிட்டார்.

pudhucherry government targets to wine shop

இந்நிலையில், சாராயக் கடைகள் மூலம் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பிராந்தியத்தில் மொத்தம் 98 சாராயக் கடைகள் உள்ளன. இதில் 16 கடைகளின் உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள 80 கடைகளுக்கு ஏலம் நடைபெறுகிறது. காரைக்கால் பிராந்தியத்தில் 27 சாராயக் கடைகள் உள்ளன. இதில் 19 கடைகளின் உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 8 கடைகளுக்கு ஏலம் நடைபெறுகிறது.

அதேபோல் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 69 கள்ளுக்கடைகளில், 22 கடைகளின் உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 47 கடைகள் ஏலம் நடைபெறுகிறது.

கடைகள் குத்தகை காலம் 3 ஆண்டுகளாகும். அதில் அதிகப்பட்சம் ஏலம் கேட்போருக்கு கள், சாராயக் கடைகள் ஒதுக்கப்படும். இதனிடையே சாராயக் கடைகள் மூலம் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த கோரி பல்வேறு தரப்பினரும் போர்க்கொடி உயர்த்தி வரும் நிலையில், சாராய விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது புதுவை அரசு.

English summary
pudhucherry government targets rs.100 crore revenue from liquor sale,says minister Namasivayam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X