For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உச்சகட்ட மோதல்.. புதுவை பட்ஜெட்டுக்கு அனுமதி தராமல் கிடப்பில் போட்டார் பேடி.. சட்டசபை ஒத்திவைப்பு

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்க மறுத்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    புதுவையில் தொடரும் ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையிலான மோதல்- வீடியோ

    புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்க மறுத்து இருக்கிறார்.

    டெல்லியில் துணை நிலை ஆளுநருக்கும், முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் பிரச்சனை ஓரளவு தீர்ந்து இருக்கிறது என்று கூட கூறலாம். முதல்வருக்கே அதிக அதிகாரம் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் டெல்லி விவகாரத்தில் கூறியுள்ளது.

    Puducherry Lt.Governor Kiran Bedi doesnt give nod for the budget in the state

    ஆனால் இன்னும் புதுச்சேரியில் இந்தபிரச்சனை முடியவில்லை. புதுச்சேரியின் விதிமுறையும் டெல்லியின் விதிமுறையும் வேறு வேறு என்று கூறப்படுகிறது. இதனால் புதுச்சேரி துணை நிலை ஆளுநர், இன்னும் அங்கு ஆய்வு செய்வதும், விதிமுறைகளை மாற்றும் நடைமுறையிலும் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த நிலையில் தற்போது புதுச்சேரியில் அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்க மறுத்து இருக்கிறார். டெல்லியில் இதேபோல் சம்பவம் ஒருமுறை நடந்தது. ஆனால் அப்போது சட்டசபை ஒத்திவைக்கப்படவில்லை.

    ஆனால் இப்போது புதுச்சேரியில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைக்காததால் சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.இந்திய வரலாற்றில் முதல் முறையாக பட்ஜெட் மசோதா நிறைவேறாமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த பிரச்சனையால் துணைநிலை ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையில் புதுச்சேரியில் பிரச்சனை வலுத்து இருக்கிறது.

    English summary
    Puducherry Lt.Governor Kiran Bedi doesn't give nod for the budget in the state. Due the Kiran Bedi's negative nod, whole budget session in Puducherry gets canceled.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X