For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெரிய காலாடி.. குடல் சரிந்த போதும் கான் சாகிப்பை எதிர்த்து போரிட்ட போர்ப்படை தளபதி!!

பூலித்தேவனின் போர்ப்படை தளபதி பெரிய காலாடி ஆங்கிலேய இஸ்லாமிய மன்னரை எதிர்த்து போரிட்டு உயிர்துறந்தார்.

Google Oneindia Tamil News

சென்னை: பூலித்தேவனின் போர்ப்படை தளபதி பெரிய காலாடி ஆங்கிலேய இஸ்லாமிய மன்னரை எதிர்த்து போரிட்டு உயிர்துறந்தார்.

இந்தியா இன்று தனது 72வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. இந்த நாளில் பல பெரும் விடுதலை போராட்ட வீரர்களை நினைவில் கொள்வது வாடிக்கை.

நாட்டுக்காகவும் விடுதலைக்காகவும் தங்களின் இன்னுயிர் துறந்த சில வீரர்களையும் நினைவுகூறுவோம். அப்படி நினைவுகூறப்பட வேண்டிய ஒருவர்தான் பெரிய காலாடி.

பெரிய காலாடி

பெரிய காலாடி

வெண்ணிக் காலாடி அல்லது பெரிய காலாடி என்பவர் பூலித்தேவன் படையின் முக்கியத் தளபதியாக இருந்தவர். வெண்ணிக்காலாடி தேவேந்திர குல காலாடி என்ற உட்பிரிவைச் சேர்ந்தவர்.

கான்சாகிப் திட்டம்

கான்சாகிப் திட்டம்

காலாடி என்ற பெயர் போர் படையில் காலாட்படை வீரர்களை குறிப்பதாகும். பூலித்தேவனை நேரில் சென்று எதிர்க்க முடியாது என்று எண்ணிய ஆங்கிலேய அரசர் கான்சாகிப், இரவில் பூலித்தேவரின் கோட்டையை முற்றுகையிடலாம் என்று தீர்மானித்தார்.

தாக்கிய காலாடி

தாக்கிய காலாடி

இதற்காக கான்சாகிப்பின் படைகள், காட்டில் முகாமிட்டிருந்தது. இந்த செய்தியை அறிந்த பெரிய காலாடி சில வீரர்களுடன் சென்று அம்முகாமைத் தாக்கினார்.

குடல் வெளியே வந்தது

குடல் வெளியே வந்தது

அப்போது எதிரி வீரன் ஒருவன் மறைந்திருந்து தாக்கியதால் காயமுற்றார் பெரிய காலாடி. வயிறு கிழிக்கப்பட்டு, குடல் வெளியே வந்த நிலையிலும், தான் தலைப்பாகையாகக் கட்டியிருந்த துண்டை எடுத்து, வெளியே வந்த தன் குடலை மீண்டும் வயிற்றுக்குள் தள்ளி, தன் வயிற்றைத் துண்டால் கட்டிக் கொண்டு எதிரிகளுடன் சண்டையிட்டு அவர்களை தோற்கடித்தார்.

பூலித்தேவரிடம்

பூலித்தேவரிடம்

தான் எதிரிகளை தோற்கடித்ததையும், அவர்கள் படையுடன் காட்டில் சென்று பதுங்கியிருப்பதையும் தெரிவிக்க சூறாவளியைப் போல் தன் குதிரையை செலுத்தி பூலித்தேவரிடம் வந்தடைந்தார்.

மரணம் அடைந்தார்

மரணம் அடைந்தார்

பலத்த காயத்துடன் வந்த வெண்ணிக்காலாடியை பூலித்தேவர் தன் மடியில் கிடத்தி நடந்தவற்றை கேட்டுக்கொண்டிந்த நேரம், செய்தியை கூறிவிட்டு மரணம் அடைந்தார்.

காலாடி மேடு

காலாடி மேடு

தன் தளபதி பெரிய காலாடி எதிரிகளுடன் போரிட்டு மரணம் அடைந்த இடத்தில், பிற்காலத்தில் பூலித்தேவர், வீரக்கல் ஒன்றை நட்டு வைத்தார். அந்த இடம் இன்றும் இப்பகுதி மக்களால் ‘காலாடி மேடு' என்று அழைக்கப்படுகிறது.

துண்டாக்கப்பட்ட கான்சாஹிப்

துண்டாக்கப்பட்ட கான்சாஹிப்

பின்னர் ஆங்கிலேயரையும் ஆற்காடு நாவபையும் எதிர்த்த கான்சாஹிப் 15-10-1764ல் மதுரையில் உள்ள கம்பெனியாரின் ராணுவ முகாம் முன்பு ஆற்காட்டு நவாபால் மதுரை சம்மட்டிபுரத்தில் உள்ள மரத்தில் தூக்கிலிடப்பட்டார். அவரைக் கண்டு அஞ்சு நடுங்கிய ஆங்கிலேயர்களும், ஆற்காடு நவாபும் அவரது தலையை திருச்சிக்கும், கைகளை பாளையங்கோட்டைக்கும், கால்களை தஞ்சைக்கும், திருவிதாங்கூருக்கும் அனுப்பி வைத்தனர்.

சாஹிப் பள்ளிவாசல்

சாஹிப் பள்ளிவாசல்

உடலை, தூக்கிலிட்ட சம்மட்டிபுரத்தில் புதைத்தனர். கான்சாஹிப்பின் சமாதி இன்றும் மதுரையில் உள்ளது. 1808இல் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது உடல் புதைக்கப்பட்ட சம்மட்டிப்புரத்தில் தர்கா ஒன்று ஷேக் இமாம் என்பரால் எழுப்பப்பட்டு அது இன்றும் கான் சாஹிப் பள்ளி வாசல் என அறியப்பட்டு தொழுகை நடைபெற்று வருகிறது.

English summary
Pulithevan's war veteran commander Periya Kaladi was fought and killed by the British Islamic King.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X