For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

3 தொகுதி இடைத்தேர்தல்.. புதிய தமிழகம் புறக்கணிப்பு - கிருஷ்ணசாமி அறிவிப்பு

நவம்பர் 19ம் தேதி நடைபெறும் 3 தொகுதி இடைத்தேர்தலை புதிய தமிழகம் கட்சி புறக்கணிப்பதாக அக் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களை புதிய தமிழகம் கட்சி புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். மேலும் 3 தொகுதிகளிலும் யாருக்கும் ஆதரவு இல்லை எனவும் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

மே மாதம் நடைபெற்ற 2016 சட்டசபை தேர்தலில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் பணப்பட்டுவாடா உள்ளிட்ட பிரச்சனைகளால், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 232 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. அதேபோல் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சீனிவேல் மரணமடைந்ததை அடுத்து 3 தொகுதிகளும் காலியாக இருந்தன. அந்த தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

puthiya tamilagam boycott upcoming 3 assembly constituency

இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளின் இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்று கூறினார். மேலும் 3 தொகுதிகளிலும் யாருக்கும் ஆதரவு இல்லை எனவும் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

English summary
puthiya tamilagam leader krishnasamy has announced today to boycott the elections to the Aravakurichi and Thanjavur assembly segments and bypoll to the Thiruparankundram assembly constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X