For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூட்டணிக் கட்சிகளுக்கு 58 சீட்.. 176 இடங்களில் போட்டியிடுகிறது திமுக

Google Oneindia Tamil News

சென்னை: திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு 58 இடங்களை ஒதுக்கியுள்ளதால், அக்கட்சி 176 இடங்களில் நேரடியாக போட்டியிடுகிறது.

சட்டசபைத் தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட் அகட்சிகள் இடம் பெற்றுள்ளன. இக்கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டு வருகிறது.

Puthiya Thamizhagam gets 4 seats in DMK alliance

ஏற்கனவே, காங்கிரஸிற்கு 41 தொகுதிகளும், ஜவாஹிருல்லாவின் மனித நேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகளும், பெருந்தலைவர் மக்கள் கட்சி, விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, சமூக சமத்துவப்படை ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இன்று புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று நேரில் சந்தித்து பேசியதைத் தொடர்ந்து இந்தத் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது.

இதனால், மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு 58 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், திமுக 176 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

English summary
Puthiya Thamizhagam (PT), which is part of the DMK alliance, will be contesting four seats in the upcoming assembly elections in Tamil Nadu. DMK is left with 176 seats, but more smaller parties are expected to join the alliance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X