For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதிய தமிழகத்திலும் பிளவு! ஜெ.வை சந்தித்தார் நிலக்கோட்டை எம்.எல்.ஏ. ராமசாமி!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை புதிய தமிழகம் கட்சியின் நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. ராமசாமி இன்று சென்னையில் சந்தித்தார்.

புதிய தமிழகம் கட்சிக்கு அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் நிலக்கோட்டை ராமசாமி ஆகியோர் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

PT Mla meets Jayalalithaa

இதனால் சட்டசபையில் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக ராமசாமி செயல்படாமல் அமைத் காத்தே வந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த கிருஷ்ணசாமியும் கூட, எல்லா சாமியும் நானே என்று பிரச்சனை இருக்கிறது என்று ஒப்புக் கொண்டார்.

இதனிடையே முதல்வர் ஜெயலலிதாவை புதிய தமிழகம் எம்.எல்.ஏ.ராமசாமி சந்திக்கப் போகிறார் என்று பல மாதங்களாக செய்திகள் உலா வந்தன. இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக இன்று கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா எம்.எல்.ஏ ராமசாமி நேரில் சந்தித்து பேசினார்.

அப்போது தமது நிலக்கோட்டை தொகுதி வளர்ச்சிக்கான திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றித் தரக் கோரி மனு ஒன்றையும் முதல்வர் ஜெயலலிதாவிடம் ராமசாமி கொடுத்தார்.

English summary
Puthiya Thamizhagam's Nilakkottai constituency Assembly member Ramasamy met Chief Minister Jayalalitha on today in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X