மக்கள் நலக் கூட்டணியில் இணைய விஜயகாந்த்துக்கு வைகோ, திருமா, ஜி.ஆர்., முத்தரசன் நேரில் அழைப்பு!
சென்னை: மக்கள் நலக் கூட்டணியில் இணையுமாறு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கட்சியின் செயலர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் முத்தரசன் ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க.வுக்கு மாற்றாக ம.தி.மு.க, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி உள்ளன. அத்துடன் இக்கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க., காங்கிரஸ் ஆகியவற்றை சேர்க்கப் போவதில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தே.மு.தி.க, த.மா.கா. ஆகியவை தங்கள் கூட்டணியில் இடம்பெற வேண்டும் என மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் அழைப்பு விடுத்து வந்தனர். இந்த நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை பா.ஜ.க. தலைவர்கள் நேரில் சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.
ஆனால் தம்மை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று விஜயகாந்த் நிபந்தனை விதித்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் விஜயகாந்த்தை மக்கள் நலக் கூட்டணி தலைவர்களான வைகோ, திருமாவளவன், ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் இன்று நேரில் சந்தித்து பேசினர்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது தே.மு.தி.க. மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்று அவர்கள் நேரில் அழைப்பு விடுத்தனர். இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணிநேரம் நடைபெற்றது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற வேண்டும் என அழைப்பு விடுத்தோம். விஜயகாந்த் சாதகமான முடிவை எடுப்பார் என நம்புகிறோம் என்றார்.
மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற்றால் விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications