For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக, திமுகவால் சீரழிந்த கல்வித்துறை... பாமக ஆட்சியில் சீரமைக்கப்படும்: ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக, அதிமுக ஆட்சியின் போது தமிழகத்தில் கல்வித் துறை சீரழிக்கப்பட்டு விட்டதாகவும், பாமக ஆட்சிக்கு வந்ததும் அவை சீரமைக்கப்படும் என்றும் பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அடுத்தவாரம் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில், தேர்தல் சிறப்பு அறிக்கை என்ற பெயரில் பாமக நிறுவனர் ராமதாஸ் முதல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கல்வி தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சீரழிக்கப்பட்ட கல்வித்துறை...

சீரழிக்கப்பட்ட கல்வித்துறை...

மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்திற்கும் அடிப்படை கல்வி ஆகும். ஆனால், திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுகால ஆட்சியில் திட்டமிட்டு சீரழிக்கப்பட்ட துறைகளின் பட்டியலில் முதலிடம் பிடிப்பது கல்வித் துறை தான். தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் தடை இச்சீரழிவு தான்.

மனப்பாட எந்திரங்களாக மாணவர்கள்...

மனப்பாட எந்திரங்களாக மாணவர்கள்...

பயிர்கள் சிறப்பாக வளர்ந்து அமோக விளைச்சல் தர வேண்டும் என்றால் நாற்றாங்கால் வலுவாக இருக்க வேண்டும். கல்வியின் நாற்றாங்கால்கள் பள்ளிக்கூடங்கள் தான். காமராஜர் ஆட்சிக்காலம் வரை தமிழகத்தில் நல்ல சிந்தனையாளர்களும், அறிவியலாளர்களும் உருவெடுக்கக் காரணம் பள்ளிக் கல்வி வலிமையாக இருந்தது தான். ஆனால், திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் அரசு பள்ளிக்கூடம் சீரழிக்கப்பட்டு, மனப்பாடத்தை ஊக்குவிக்கும் தனியார் பள்ளிகள் ஊக்குவிக்கப்பட்டன. அதனால் மாணவர்கள் சிந்திக்கும் திறனை இழந்து மனப்பாட எந்திரங்களாக மாறினர். அதன் விளைவாகவே ஐ.ஐ.டி. தொடங்கி அனைத்து தேசிய நுழைவுத் தேர்வுகளிலும் தமிழக மாணவர்கள் பின்தங்கினார்கள்.

தமிழக மாணவர்களின் நிலை...

தமிழக மாணவர்களின் நிலை...

ஐ.ஐ.டிக்களில் உள்ள 10,000 இடங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றை சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட மாணவர்கள் கைப்பற்ற மீதமுள்ளவற்றில் பெரும்பாலானவற்றை ஆந்திரா, மராட்டியம், இராஜஸ்தான் பாடத்திட்ட மாணவர்கள் பகிர்ந்து கொண்டனர். மொத்த இடங்களில் தமிழக பாடத்திட்டத்தை படித்தவர்களுக்கு கிடைத்தது வெறும் 9 இடங்கள் மட்டுமே. தமிழகத்தில் கடந்த ஆண்டு 9 லட்சம் மாணவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நிலையில், லட்சத்தில் ஒருவருக்கு தான் ஐ.ஐ.டி வாய்ப்பு கிடைத்திருக்கிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் உள்ள நூற்றுக்கணக்கான இடங்களில் ஒன்று கூட தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. காஞ்சிபுரத்தில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐ.ஐ.ஐ.டி) மொத்தமுள்ள 210 இடங்களில் ஒரே ஒரு இடம் தான் தமிழக பாடத்திட்ட மாணவருக்கு கிடைத்திருக்கிறது. இவ்வாறாக தமிழகப் பாடத்திட்ட மாணவர்களை பயனற்றவர்களாக மாற்றிய பாவம் 50 ஆண்டு கால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளையே சேரும் என்பதில் ஐயமில்லை.

மருத்துவ நுழைவுத்தேர்வு...

மருத்துவ நுழைவுத்தேர்வு...

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் உருவாக்கப்படுகின்றனர். அவர்களில் 30,000 பேருக்குக் கூட வேலை கிடைப்பதில்லை. மருத்துவப் படிப்புக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், மருத்துவம் கற்க நினைத்த தமிழக மாணவர்களின் கனவு சிதைந்திருக்கிறது. இதற்குக் காரணம் நகரம் முதல் கிராமம் வரை அனைத்து மாணவர்களுக்கும் உலகத்தர சமச்சீர் கல்வி வழங்க தமிழக அரசு தவறியது தான்.

சமச்சீர்கல்வி...

சமச்சீர்கல்வி...

தமிழகத்தில் தரமான சமச்சீர்கல்வி வழங்கப்பட வேண்டும் என நான் வலியுறுத்திய போது, என்னை சமரசப்படுத்துவதற்காக தரமற்ற, பெயரளவிலான சமச்சீர் கல்வியை கொண்டு வந்தவர் கலைஞர். அந்த கல்விக்கும் முட்டுக்கட்டை போட்டவர் ஜெயலலிதா. இவையெல்லாம் அறியாமல் நிகழ்ந்த தவறு அல்ல. கல்வித்துறையை சீரழிக்க திராவிடக் கட்சிகள் திட்டமிட்டு அரங்கேற்றிய சதிச் செயல்கள்.

செயல்திட்டங்கள்...

செயல்திட்டங்கள்...

இந்த சீரழிவுகளை சரி செய்வதற்கான செயல்திட்டத்தைத் தான் பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தமிழக மக்களிடம் முன்வைத்திருக்கிறார். சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்துக்கு இணையான கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும். தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் அரசே செலுத்தும். ஐ.ஐ.டி. உள்ளிட்ட தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள வசதியாக 9 ஆம் வகுப்பிலிருந்தே சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். மாணவர்களுக்கு பேனா முதல் இணைய வசதியுடன் கூடிய கையக்க கணினி வரை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என்று அன்புமணி இராமதாஸ் அறிவித்துள்ளார்.

திறன்சார் கல்வி முறை...

திறன்சார் கல்வி முறை...

மாணவர்களின் வேலைவாய்ப்புத்திறனை பெருக்கும் வகையில் திறன் சார் கல்வி முறை (Skill Based Education), அறிவுசார் கல்வி முறை(Knowledge Based Education), தொழிற்கல்வி முறை (Vocatioanal Education) அறிமுகப்படுத்தப்படும். அதன்படி 11 ஆம் ஆண்டில் வழக்கமான பாடங்களுடன் வேலைவாய்ப்பு பயிற்சிப் பாடம் கூடுதலாக சேர்க்கப்படும். உயர்கல்வியைப் பொறுத்தவரை அதிக எண்ணிக்கையில் உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படுவதுடன், வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்காக தொழில்நுட்ப தொழில்கல்வி மற்றும் பயிற்சியை (Technical Vocational Education and Training - TVET) வழங்க உலகத்தர தொழில் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்படும். தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு, படிக்கும் போதே மாணவர்களுக்கு பயிற்சியும், படித்த பின் வேலைவாய்ப்பும் வழங்க வகை செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

வேண்டுகோள்...

வேண்டுகோள்...

கல்வித்தரத்தை உயர்த்தவும், வேலைவாய்ப்பை பெருக்கவும் இதைவிட சிறப்பான செயல்திட்டத்தை எவரும் வழங்க முடியாது. இளைஞர்கள், படித்தவர்கள், படித்த பெண்கள், 20% நடுநிலையாளர்கள், அரசியல் சாக்கடை என்று கருதி இதுவரை வாக்களிக்காமல் இருந்து முதல்முறையாக வாக்களிப்போர் உள்ளிட்ட உங்களால் தான் மாற்றத்தை உருவாக்க முடியும். ஜனநாயகத்தை விலைபேசும் முயற்சிகள் உங்களிடம் வெற்றி பெறாது; ஜனநாயகத்தை பாதுகாக்க உங்களால் தான் முடியும் என்ற நம்பிக்கையில் தான் இந்த வேண்டுகோளை நான் உங்கள் முன் வைக்கிறேன். தமிழகத்தில் மாற்றத்திற்கான நேரம் வந்து விட்டது (It is time for Change in Tamilnadu). தமிழகத்தில் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் பண்பாட்டுத் தளங்களில் புரையோடிப் போயிருக்கும் புண்ணை குணப்படுத்த அன்புமணி என்ற மருத்துவரால் தான் முடியும் என்பதை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். அதற்கான தக்க நேரம் இது தான் (It is time to heal the wounds, that are so very deep). எனவே, வளமான எதிர்காலத்தை உருவாக்க மருத்துவர் அன்புமணியை முதலமைச்சராக்க வேண்டும். அதற்காக வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்''என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
The PMK founder Ramadoss has alleged that in ADMK, DMK regime the quality of education in Tamilnadu was decrease.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X