For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுகவின் ஹாட்ரிக் கோட்டை ஆர்.கே.நகர்.. தொகுதியின் முழு பயோ-டேட்டா!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: வட சென்னையில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் நடுவிலுள்ளது டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி. சுருக்கமாக ஆர்.கே.நகர் தொகுதி.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் விஐபி அந்தஸ்து பெறப்போகிறது இந்த தொகுதி. இந்த தொகுதியில் 2011ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த வெற்றிவேல் கடந்த 17ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

R.K.Nagar constituency always favour for AIADMK

அன்றே அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தக்கோரி தலைமை தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஜூன் மாதம் 27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆர்.கே.நகர் தொகுதியில் இப்போதே தேர்தல் விறுவிறுப்பு ஏற்படத் தொடங்கி விட்டது.

முதல்வர் ஜெயலலிதா இத்தொகுதியில் போட்டியிடப்போவதாக தெரிந்ததும் தங்கள் தொகுதி விஐபி தொகுதியாக மாறப்போவதை நினைத்து தொகுதி மக்கள் ஏக சந்தோஷத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி பற்றிய ஒரு பார்வை:

1957ம் ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி உருவாக்கப்பட்டது. இந்த தொகுதியில் இதுவரை 13 தடவை தேர்தல் நடந்துள்ளன. இதில் 5 தடவை அ.தி.மு.க. வெற்றி பெற்று முன்னணியில் உள்ளது. தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும் தலா 4 தடவை வெற்றி பெற்றன.

முதலில் இந்த தொகுதி காங்கிரசுக்கு சாதகமான தொகுதிகளில் ஒன்றாக இருந்த இது, பிறகு திமுக கோட்டையாக மாறியது. 1977ல் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய போது, இந்த தொகுதி அ.தி.மு.க.வின் சாதகமான தொகுதியானது. நாளடைவில் இந்த தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டைகளில் ஒன்றானது. திமுக கோட்டையாக இருந்த, சென்னையில் உள்ள சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு முதல் வெற்றியைக் கொடுத்தது இந்த தொகுதிதான்.

1957-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த 13 சட்டசபை தேர்தல்களில் இந்த தொகுதியில் வெற்றி பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்கள் மற்றும் அவர்கள் பெற்ற ஓட்டுக்களை பற்றி பார்க்கலாம்.

முதல் தேர்தல்: டி.என்.அனந்தநாயகி (காங்கிரஸ்) - 20,441 வாக்குகள் பெற்று வெற்றி. என்.வி.நடராஜன் (தி.மு.க.) - 14,367 வாக்குகள் பெற்று 2வது இடம் பிடித்தார்.

இரண்டாவது தேர்தல்: டி.என்.அனந்தநாயகி (காங்கிரஸ்) - 31,477 வாக்குகள் பெற்று மீண்டும் வெற்றி பெற்றார். என்.வி.நடராஜன் (தி.மு.க.) - 25,913 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

3வது தேர்தல்: எம்.ஆர்.கண்ணன் (தி.மு.க.) - 40,109 வாக்குகள் பெற்று திமுகவை முதன்முதலில் காலூன்ற செய்தார். இரண்டாவது இடம் இம்முறை காங்கிரசுக்கு. அக்கட்சியின் கே.ராமதாஸ் 30,757 வாக்குகள் பெற்றார்.

4வது தேர்தல்: எம்.ஆர்.கண்ணன் (தி.மு.க.) - 48,959 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கே.ராமதாஸ் (காங்கிரஸ்- ஓ) - 33,174 வாக்குகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்தார்.

5வது தேர்தல்: ஐசரி வேலன் (அ.தி.மு.க.) - 28,416 வாக்குகள் பெற்று முதல்முறையாக அதிமுக கொடியை ஏற்றினார். அத்தேர்தலில் திமுகவின் ஆர்.டி. சீதாபதி, 26,928 வாக்ககுகளை பெற்று சுமார் ஆயிரத்து ஐநூறு ஓட்டு வித்தியாசத்தில் தோற்றார்.

6வது தேர்தல்: இம்முறை மீண்டும் காங்கிரஸ் கட்சி கொடி இங்கு பறந்தது. வி.ராஜசேகரன் பெற்ற வாக்குகள் 44,076. இரண்டாவது இடம் பிடித்த ஐசரி வேலன் (அ.தி.மு.க.) பெற்ற வாக்குகள் 36,888.

7வது தேர்தல்: எஸ்.வேணுகோபால் (காங்கிரஸ்) - 54,334 வாக்குகள் பெற்றார். 2வது இடம் எஸ்.பி. சற்குணம் (தி.மு.க.) - 50,483.

8வது தேர்தல்: எஸ்.பி.சற்குணம் (தி.மு.க.) - 54,216. 2வது இடம்-இ.மதுசூதனன் (அ.தி.மு.க- ஜெ) - 29,960.

9வது தேர்தல்: இ.மசூதனன் (அ.தி.மு.க.)- 66,710. 2வது இடம் பிடித்தவர் வி.ராஜசேகரன் (ஜனதா தளம்) - 41,758.

10வது தேர்தல்: எஸ்.பி.சற்குணம் (தி.மு.க) - 75,125. 2வது இடம் பிடித்தவர், ஆர்.எம்.டி. ரவீந்திரன் (அ.தி.மு.க.) - 32,044

11வது தேர்தல்: பி.கே.சேகர்பாபு (அ.தி.மு.க.) - 74,888. இரண்டாவது இடம் பிடித்தவர், எஸ்.பி.சற்குண பாண்டியன் (தி.மு.க.) - 47,556.

12வது தேர்தல்: பி.கே.சேகர்பாபு (அ.தி.மு.க.) - 84,462. 2வது இடம் பிடித்தவர், ஆர்.மனோ (காங்கிரஸ்) - 66,399.

13வது தேர்தல்: பி.வெற்றிவேல் (அ.தி.மு.க) - 83,777. இரண்டாவது இடம் பிடித்தவர் பி.கே.சேகர்பாபு (தி.மு.க.) - 52,522.

கடந்த 3 தேர்தலிகளில் இந்த தொகுதியில் அ.தி.மு.க.வே தொடர்ச்சியான வெற்றியை ருசித்து வந்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலின் போதும், இந்த தொகுதியில் அ.தி.மு.க. அதிக ஓட்டுக்களைப் பெற்றது.

English summary
R.K.Nagar constituency always favour for AIADMK. Statistics shows AIADMK's strength.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X