For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனவெறி பாஜக.. சமூக வலைதளங்களில் விட்டு வெளுக்கும் தென்னிந்தியர்கள் #RacistBJP

Google Oneindia Tamil News

சென்னை: இனவெறியுடன் பேசிய முன்னாள் பாஜக எம்.பி. தருண் விஜய்க்கு, டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் மக்கள் தொடர்ந்து கண்டனங்களைக் குவித்து வருகின்றனர். நான்கு தென் மாநில பாஜக தலைமைகளையும் மக்கள் கடுமையாக விளாசி வருகின்றனர்.

தருண் விஜய்க்கு தென் மாநில பாஜக தலைவர்கள் யாரும் கண்டனம் தெரிவிக்காமல் உள்ளதற்கும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக தமிழக பாஜக தலைவர்கள் யாருமே இதுகுறித்து வாயே திறக்காமல் கப்சிப்பென்று உள்ளனர்.

ஆனால் தங்களை கேவலமாக விமர்சித்த தருண் விஜய்யையும் அவர் சார்ந்த பாஜகவையும் மக்கள் விடுவதாக இல்லை. சமூக வலைதளங்களில் தொடர்ந்து குமுறி வருகின்றனர்.

அடுத்து என்னப்பா சொல்லப் போறீங்க

தமிழர்களை பொறுக்கி என்றீர்கள். தேச துரோகிகள் என்றீர்கள். இப்போது கறுப்பர்கள். அடுத்து என்ன சொல்லப் போறீங்க என்று கொதிக்கிறார் இவர்.

அந்த 31 சதவீதம் பேர் மட்டுமே

எல்லா வட இந்தியர்களும் இனவெறியர்கள் அல்ல. அந்த 31 சதவீதம் பேர் மட்டுமே என்று கூறுகிறார் இவர்.

எங்க காசுல வாழ்ந்து கொண்டு

தென் மாநிலங்களின் ஜிடிபி, 20 வட இந்திய மாநிலங்களின் ஜிடிபியை விட அதிகம். எங்களது காசில்தான் ஒட்டுமொத்த இந்தியாவும் வாழ்கிறது என்று விளாசியுள்ளார் இவர்.

கர்நாடகா பக்கம் வந்துராதீங்க

ஹரகங்கி என்ற கர்நாடக மாநிலத்தவர் கூறுகையில், இனவாத பாஜகவே, கர்நாடகத்திற்கு தேர்தலில் ஓட்டு கேட்டு வந்து விடாதே. கர்நாடக பாஜகவுக்கு கொஞ்சமாவது சுயமரியாதை இருந்தால், தருண் விஜய்யைக் கண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

நாங்க பிளாக்குதான்.. கிராக்கு இல்லை

நாங்க "பிளாக்"தான்... ஆனால் "கிராக்" கிடையாது எனறு கூறியுள்ளார் இவர்.

தென்னிந்தியர் என்பதே பெருமை

இனியும் என்னை இந்தியன் என்று பெருமையாக கூற மாட்டேன். மாறாக பெருமைக்குரிய தென்னிந்தியன் என்று கூறிக் கொள்ளவே விரும்புகிறேன்.

பொன்னார், தமிழிசையின் சப்பைக் கட்டு என்னவோ

பொன்னாரும், தமிழிசையும் வந்து சப்பைக் கட்டு கூறப் போவதைப் பார்க்க காத்திருக்கிறேன்.

English summary
Former BJP MP Tarun Vijay's racist remarks against South Indians is raging in social media and #Racist BJP is trending fast.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X