For Daily Alerts
Just In
ரேகிங்: சேலம் கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி!- வீடியோ
சேலம்: சேலம் மாவட்டத்தில் தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் ரேகிங் காரணமாக விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மாசிநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் படித்து வருபவர் கோகுல்ராஜ். விடுதியில் தங்கி படித்து வரும் கோகுல்ராஜ், ரேகிங் கொடுமை காரணமாக விடுதியில் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் படுகாயமடைந்த கோகுல்ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.