For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கனிமொழி, தயாளு அம்மாள், ராசா விடுதலை - ராகுல், தினகரன், வைகோ வாழ்த்து

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து விடுதலையான கனிமொழி,தயாளு அம்மாள், அ.ராஜாவிற்கு ராகுல்காந்தியும், வாழ்த்து கூறியுள்ளார் டிடிவி தினகரன்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    2ஜி அலைக்கற்றை மோசடியானது தான்...வீடியோ

    சென்னை: 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் இருந்து கனிமொழி, அ.ராஜா, தயாளு அம்மாள் விடுதலை பெற்றுள்ளதற்கு ராகுல்காந்தி வாழ்த்து கூறியுள்ளார்.

    காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்தார். பதவிக்காலத்தில் 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    நாட்டையே உலுக்கிய ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை வைத்து கடந்த 7 ஆண்டுகளாக அரசியல் நடந்து வருகிறது
    வழக்கின் இறுதிக் கட்ட வாதம் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. அதன்பிறகு தீர்ப்பு தேதி பலகட்டங்களாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 21ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று கடந்த 5ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஷைனி, குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதால் 14 பேரையும் விடுவிப்பதாக அறிவித்தார்.

    வழிகாட்டும் தீர்ப்பு

    வழிகாட்டும் தீர்ப்பு

    அனைத்து இழப்புகளையும் சரிசெய்யும் வகையில் தீர்ப்பு அமைந்துள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். சிபிஐ நேர்மையாக நடக்க வேண்டும் என வழிகாட்டும் வகையில் தீர்ப்பு அமைந்துள்ளது என்றும் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, சிபிஐ மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.

    கனிமொழிக்கு வாழ்த்து

    கனிமொழிக்கு வாழ்த்து

    2 ஜி வழக்கில் இருந்து விடுதலையான கனிமொழிக்கு காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி தொலைபேசி மூலம் வாழ்த்து கூறியுள்ளார். நீதி வென்றுள்ளது என்று கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    கரை நீங்கியது

    கரை நீங்கியது

    2ஜி வழக்கில் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை மனமகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும் 6 ஆண்டாக நடந்து வந்த வழக்கில் திமுக மீதான கரையை நீக்கியது நீதிமன்றம் என்று வைகோ கூறியுள்ளார்.

    வாழ்த்து சொன்ன தினகரன்

    வாழ்த்து சொன்ன தினகரன்

    கனிமொழியின் விடுதலைக்கு டிடிவி தினகரன் வாழ்த்து கூறியுள்ளார். 2 ஜி வழக்கில் இருந்து அனைவரும் விடுதலையடைந்தது மகிழ்ச்சி. ராஜா, கனிமொழி தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். அவர்கள் சிறைக்கு செல்ல வேண்டும் என்று விரும்பவில்லை. விடுதலையானதற்கு மகிழ்ச்சி. தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஆட்சியை இழந்த திமுக

    ஆட்சியை இழந்த திமுக

    இந்த ஊழல் குற்றச்சாட்டால் தமிழ்நாட்டில் திமுகவும், மத்தியில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை இழந்தது. இதுவரையில் இந்த பாதிப்பிலிருந்து இவ்விரு கட்சிகளும் மீளவே இல்லை. இந்த தீர்ப்பின் மூலம் திமுகவின் மீதான களங்கம் துடைக்கப்பட்டுள்ளதாக திமுக கட்சித்தலைவர்கள் கூறி வருகின்றனர்.

    English summary
    Congress president Rahul Gandhi, TTV Dinakaran and MDMK leader Vaiko have greeted Kanimozhi and others in 2G verdict. All the accused in the case have been freed from the case today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X