For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருச்சி-நெல்லை இன்டர்சிட்டி ரயில் இரணியலில் நிற்கவில்லை எனில் போராட்டம்: குளச்சல் எம்எல்ஏ வார்னிங்

திருச்சியிலிருந்து திருநெல்வேலி செல்லும் இன்டர்சிட்டி ரயிலானது, குமரி மாவட்டம் இரணியல் ரயில் நிலையத்தில் நிற்கவில்லை என்றால் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று குளச்சல் எம்எல்ஏ பிரின்ஸ் எச்சரிக

Google Oneindia Tamil News

குளச்சல்: திருச்சியிலிருந்து திருநெல்வேலி செல்லும் இன்டர்சிட்டி ரயிலானது குமரி மாவட்டம் இரணியல் ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றால் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக குளச்சல் தொகுதி எம்எல்ஏ பிரின்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

2012-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் திருச்சியிலிருந்து மதுரை வழியாக பகல் நேரத்தில் பயணிக்கும் வகையில் புதிய இன்டர்சிட்டி ரயிலை அறிவித்து இயக்கியது. இந்த ரயில் இயக்கும் போதே குமரி மாவட்ட பயணிகளும் பயன்படும் வகையில் நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கை கடந்த நான்கு ஆண்டுகளாகவே நிறைவேற்றப்படவில்லை.

Rail roko against Trichy Intercity express train not stopped in Iraniyal Railway station

ரயில்வே அமைச்சருக்கு கடிதம்

இந்த ரயில் நாகர்கோவிலிருந்து இயக்கப்பட்டு இருந்தால் குமரி மாவட்ட பயணிகளுக்கு பகல்நேரத்தில் தங்கள் மாநிலத்தின் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்க மிகவும் உதவியாக இருந்திருக்கும். அதற்காக எம்எல்ஏ என்ற முறையில் பலமுறை ரயில்வே அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பினேன்.

ஜூலை 15 முதல்

கடந்த சனிக்கிழமை திருச்சியில் நடைபெற்ற விழாவில் திருச்சி - திருநெல்வேலி இன்டர்சிட்டி ரயில் திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்யப்படும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்தார். மேலும் இந்த ரயில் ஜூலை மாதம் 15-ஆம் தேதி முதல் நீட்டிக்கப்படும் என்றும், வள்ளியூர், நாகர்கோவில் டவுன், குழித்துறை ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரயில் இரணியல் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நுழைவு வாயில்

இரணியல் ரயில் நிலையம் குமரி மாவட்டம் கல்குளம் தாலுகாவில் உள்ள முக்கிய ரயில் நிலையம் ஆகும். இந்த இரயில் நிலையம் மண்டைகாடு பகவதி அம்மன் கோவில், நெய்யூர் மருத்துவமனை, பத்மானபபுரம் அரண்மனை, மணவாளகுறிச்சி மணல் ஆலை போன்ற முக்கிய போன்ற அலுவலகங்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் பல்வேறு இடங்களுக்கு நுழைவாயிலாக அமைந்துள்ளன.

வாரந்திர ரயில்களும்...

இந்த ரயில் நிலையம் வழியாக மங்களுர் - நாகர்கோவில் ஏரநாடு தவிர அனைத்து தினசரி ரயில்களும் நின்று செல்கின்றன. ஆனால் இந்த வழித்தடம் வழியாக இயங்கும் வாராந்திர ரயில்கள் நின்று செல்வதில்லை.

ரயில் மறியல் போராட்டம்

குளச்சல் சட்டசபை தொகுதி பொதுமக்களின் நலன்கருதி இந்த ரயிலுக்கு நிரந்தர நிறுத்தம் அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்காவிட்டால்இந்த ரயிலை இரணியல் ரயில் நிலையத்தில் மறியல் செய்வோம்.

இவ்வாறு பிரின்ஸ் எம்.எல்.ஏ. எச்சரிக்கை விடுத்துள்ளார்.

English summary
Trichy- Nellai inter city express service will start from July 15. If that train should not stop in Eraniyal Railway station, a rail roko will be done, says Colacchel MLA Prince.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X