For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பரங்கிமலையில் 5 உயிர்கள் பறிபோன விவகாரம்.. ரயில்களில் படிக்கட்டில் பயணித்தால் பாஸ் ரத்து!

ரயில்களில் படிக்கட்டில் பயணம் செய்தால் பாஸ் ரத்து செய்யப்படும் என ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் லூயில் அமுதன் எச்சரித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஒரு மாதத்தில் மட்டும் 20 பேர் பலியானதாக பயணிகள் குமுறல்- வீடியோ

    சென்னை: ரயில்களில் படிக்கட்டில் பயணம் செய்தால் பாஸ் ரத்து செய்யப்படும் என ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் லூயில் அமுதன் எச்சரித்துள்ளார்.

    சென்னை கடற்கரை - திருமால்பூர் இடையிலான லோக்கல் ட்ரெயின் கடந்த வாரம் மின்கம்பி அறுந்து விழுந்ததால் விரைவு ரயில்கள் செல்லும் பாதையில் இயக்கப்பட்டது.

    அப்போது ஏற்கனவே ரயில் தாமதமாக வந்ததால் பலர் படிக்கட்டில் தொங்கியபடி சென்றனர். பரங்கிமலை ரயில் நிலையத்தை கடக்கும்போது பக்கவாட்டு சுவரில் படிக்கட்டில் தொங்கியவர்கள் மோதினர்.

    5 பேர் உயிரிழப்பு

    5 பேர் உயிரிழப்பு

    இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 6 பேரில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

    ஆணையர் அமுதன்

    ஆணையர் அமுதன்

    இதுதொடர்பாக ரயில்வே பாதுகாப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்
    ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் லூயிஸ் அமுதன் விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.

    ஆணையர் எச்சரிக்கை

    ஆணையர் எச்சரிக்கை

    அப்போது படிக்கட்டில் பயணம் செய்தால் பாஸ் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
    பரங்கிமலையில் படிக்கட்டில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தது எதிர்பாராதது என்றும் அவர் கூறினார்.

    700 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

    700 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

    மேலும் படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது என 700 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன என்றும் அவர் கூறினார்.

    English summary
    Railway security commissioner Louis Amudhan says Railway Pass will be canceled if passengers travel on foot board.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X