For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாகர்கோவில் டூ தாம்பரம்.. வாரத்துக்கு மூன்று நாள் ரயில் இயக்க திட்டம்!

நாகர்கோவிலிலிருந்து தாம்பரத்துக்கு வாரத்துக்கு மூன்று நாள் ரயில் இயக்க ரயில்வேத்துறை திட்டமிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: நாகர்கோவிலிலிருந்து தாம்பரத்துக்கு வாரத்துக்கு மூன்று நாள் ரயில் இயக்க ரயில்வேத்துறை திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே வாரியத்துக்கு திட்ட கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே அதிகாரி அனுப்பியுள்ள மின்னஞ்சலில் கூறியிருப்பதாவது,

Railway plans to operate rail from Nagarkovil to Tambaram weekly three times

கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தின் தென்கோடியில் அமைந்துள்ள சுமார் 18 லட்சங்கள் மக்கள் தொகை கொண்ட தமிழகத்தின் அதிக கல்வியறிவு நிறைந்த மாவட்டம் ஆகும். கன்னியாகுமரி மாவட்டம் புவியியல் அடிப்படையில் தென்கோடியில் அமைந்து தங்கள் மாநிலத்தின் தலைநகரான சென்னையிலிருந்து அதிக தொலைவில் அமைந்துள்ளது. இதனால் குமரி மாவட்ட மக்கள் தலைநகருக்கு செல்ல வேண்டுமானால் அதிக நேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் குமரி மாவட்ட மக்களின் முதல் தேர்வாக ரயிலையே நம்பி உள்ளனர். குமரி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் ரயில்கள் என்று பார்த்தால் இரண்டு தினசரி இரவு நேர ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மற்றும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆகும். இந்த இரண்டு ரயில்களும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே இயக்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு இதுவரை எந்த ஒரு புதிய ரயிலும் நாகர்கோவிலிருந்து சென்னைக்கு இயக்கப்படவில்லை. தற்போது இயக்கப்பட்டு வரும் இரண்டு ரயில்களிலும் அனந்தபுரி ரயில் கொல்லம் வரை நீட்டிப்பு செய்யப்பட்ட காரணத்தால் இந்த ரயிலின் முன்பதிவு இருக்கைகள் குமரி மாவட்ட பயணிகளுக்கு பயன்படும் படியாக இல்லை. இதைப்போல் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி காலதாமதமாகவே இயக்கப்படுகிறது. இதனால் நாகர்கோவிலிருந்து புறப்படும் படியாக சென்னைக்குகு தினசரி சூப்பர்பாஸ்டு ரயில் இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இது குறித்து குளச்சல் சட்டமன்ற உறுப்பினராகிய எனக்கும் கோரிக்கை வந்தது. நான் இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கும் ரயில்வே அமைச்சருக்கும் கோரிக்கை மனு அனுப்பி நடவடிக்கை எடுக்க மேற்கொண்டேன். எனது கோரிக்கையின்படி நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் அல்லது நாகர்கோவிலிலுந்து சென்னைக்கு புதிய தினசரி ரயில் அறிவித்து இயக்க வேண்டும் என்பது ஆகும்.

எனது கோரிக்கைக்கு மின்னஞ்சல் வழியாக பதில் அனுப்பிய தெற்கு ரயில்வே முதன்மை பயணிகள் போக்குவரத்து மேலாளர் அனந்தராமன் கூறியுள்ளதாவது,

நாகர்கோவிலிருந்து மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னைக்கு தற்போது இயக்கப்பட்டுவரும் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக மாற்றம் அல்லது நாகர்கோவிலிருந்து சென்னைக்கு தினசரி புதிய ரயில் இயக்கம் என இரண்டு கோரிக்கையையும் பரிசீலிக்கப்பட்டது. இதில் நாகர்கோவில் - சென்னை வாராந்திர ரயிலின் பெட்டிகள் சென்னை எழும்பூர் - ஜோத்பூர் ரயில் பெட்டியின் இணைப்பு பெட்டிகளான உள்ள காரணத்தால் இந்த நாகர்கோவில் - சென்னை வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்க முடியாதநிலை உள்ளது. இதனால் நாகர்கோவிலிருந்து சென்னை தாம்பரத்துக்கு வாரத்துக்கு மூன்று நாள் செல்லதக்க வகையில் ரயில் இயக்க திட்டமிட்டு காலஅட்டவணை தயார் செய்து ரயில்வே வாரியத்துக்கு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ரயில்வே வாரியத்தின் ஒப்புதல் கிடைத்ததும் இந்த ரயிலுக்கான அறிவிப்பு அதிகாரபூர்வமாக ஆகஸ்டு மாதம் வெளியிடப்படும் ரயில் காலஅட்டவணையில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகால குமரி மாவட்டத்துக்கு காங்கிரஸ் ஆட்சியில் 2008-ம் ஆண்டை தவிர மற்ற அனைத்து பட்ஜெட்டிலும் குறைந்தபட்சம் வருடத்துக்கு ஒரு ரயில் வீதம் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வந்துள்ளது. கடந்த மூன்று பட்ஜெட்டிகளில் ஒரு ரயில் கூட அறிவிக்கப்படவில்லை.

கடந்த 2004 முதல் 2014 ஆண்டுகளில் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியில் குமரி மாவட்டத்துக்கு 20 ரயில்கள் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு உள்ளது.

1. கன்னியாகுமரி - புனலூர் பயணிகள் ரயில் (2014)
2. நாகர்கோவில் - காச்சுகுடா(ஐதராபாத்) வாரத்திர ரயில் சேவை (2014)
3. நாகர்கோவில் - திருநெல்வேலி, திருநெல்வேலி - கன்னியாகுமரி, நாகர்கோவில் - கன்னியாகுமரி பயணிகள் ரயில் வாரத்துக்கு 6நாள் சேவை தினசரி அதிகரித்தல் (2013)
4. நாகர்கோவில் - கொல்லம் மெமு ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு (2013)
5. நாகர்கோவில் - பெங்களுர் வழி மதுரை தினசரி ரயில் சேவை (2013)
6. கன்னியாகுமரி - புதுச்சேரி வாரத்திர ரயில் சேவை (2013)
7. கன்னியாகுமரி - நிசாமுதீன் திருக்குறள் வாரந்திர ரயில் வாரத்துக்கு இரண்டு நாள் ரயிலாக மாற்றம் (2012)
8. திருவனந்தபுரம் - மங்களுர் பரசுராம் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு (2012)
9. நாகர்கோவில் - கொல்லம் மெமு ரயில் (2011)
10. கன்னியாகுமரி - திப்ருகர் வாரத்திர ரயில் சேவை (2011)
11. நாகர்கோவில் - மங்களுர் ஏரநாடு ரயில் வாரத்துக்கு 3 நாள் தினசரி ரயிலாக மாற்றம் (2010)
12. கொச்சுவேலி - மங்களுர் ஏரநாடு ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு (2010)
13. கன்னியாகுமரி - ராமேஸ்வரம் வாரத்துக்கு மூன்றுநாள் (2009)
14. திருநெல்வேலி - ஹாப்பா வாரத்துக்கு இரண்டுநாள் (2009)
15. திருநெல்வேலி - பிலாஸ்பூர் வாரத்திர ரயில் சேவை (2009)
16. கோட்டையம் - திருவனந்தபுரம் பயணிகள் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு (2007)
17. நாகர்கோவில் - கோயம்பத்தூர் எக்ஸ்பிரஸ் தினசரி ரயில் சேவை (2007)
18. நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வாரத்திர ரயில் சேவை (2005)
19. சென்னை - திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி ரயிலாக மாற்றம் (2005)
20. நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் வாரத்திர ரயில் சேவை (2004)

பாரதியஜனதா ஆட்சியில் குமரியிலிருந்து மத்திய அமைச்சர் இருந்தும் ஒரு ரயில் கூட அறிவிக்கப்படவில்லை

தேர்தல் அறிக்கை:-

குமரி எம்.பியும் மத்திய அமைச்சரும் தனது தேர்தல் அறிக்கையில் குமரி மாவட்ட ரயில்வே வளர்ச்சிக்கு என சுமார் 14 கோரிக்கைகளை அறிவித்திருந்தார். பாரதியஜனதா ஆட்சி அமைக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகியும் இதில் ஒரு கோரிக்கை கூட இதுவரைநிறைவேற்றவில்லை.

பொன்னாரின் தேர்தல் வாக்குறுதிகள்

1. நாகர்கோவில் இரயில் நிலையம் அனைத்து வசதிகளுடன் நவீனப்படுத்தப்பட்டு தரம் உயரத்தப்படும்.
2. மார்த்தாண்டத்தில் அமைந்திருக்கும் இரயில் நிலையத்திற்கு மார்த்தாண்டம் இரயில் நிலையம் எனவும், குழித்துறைமேற்கு என அமைந்திருக்கும் இரயில்நிலையத்திற்கு குழித்துறை இரயில் நிலையம் எனவும் பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
3. பத்து ஆண்டுகளுக்கு முன், நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அனுமதி பெறப்பட்டு பின்னர் கிடப்பில் போடப்பட்டுள்ள பார்வதிபுரம் இரயில் நிலையம் உருவாக்கப்படும்.
4. அனைத்து இரயில் நிலையங்களிலும் அடிப்படைவசதிகள் அனைத்தும் செய்வதுடன் கிராசிங் வசதியும் (ஊசழளளiபெ ளுவயவழைn) செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
5. குழித்துறை இரயில் நிலயத்தில் சுரங்கப்பாதை (ளுரடிறயல) அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
6. நாகர்கோவில் டவுண் இரயில் நிலையத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகள் அனைத்தும் முடிக்கப்படும். மேலும் கண்டன்விளை - மணக்கரை இரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
7. கன்னியாகுமரியிலிருந்து முக்கிய நகரங்களுக்கு புதிய இரயில்கள் விட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
8. குழித்துறையிலிருந்து புறப்படும் வகையில் புதிய இரயில்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
9. நாகர்கோவிலிலிருந்து மதுரைக்கு தினசரி இரயில்இயக்கவும், நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு செல்லும் வாராந்திர இரயில்கள் அனைத்தும் தினசரி இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
10. குழித்துறை வழியாக செல்லும் அனைத்து இரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
11. பத்து ஆண்டுகளுக்கு முன் நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அனுமதி பெறப்பட்டு பின்னர் கிடப்பில் போடப்பட்ட ஹைதராபாத் - கன்னியாகுமரி இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
12. நேத்திராவதி விரைவுவண்டி, பிகானர் விரைவுவண்டி போன்ற இரயில்கள் நாகர்கோவில் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
13. கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை கடற்கரை வழியாக புதிதாக இரயில் பாதை அமைக்க நடவடிக்ககை எடுக்கப்படும்
14. கன்னியாகுமரியில் புதிய இரயில்வே கோட்டம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கன்னியாகுமரி - சென்னை, கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இரயில் பாதை, இரட்டை இருப்புப்பாதையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

English summary
Railway plans to operate rail from Nagarkovil to Tambaram weekly three times.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X