For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுழற்றியடிக்கும் காற்றில் பறந்த சென்னை கடற்கரை ரயில் நிலைய கூரை #CycloneVardah

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: வர்தா புயலால் சென்னையில் வீசும் பேய்க்காற்றால் கடற்கரை ரயில் நிலைய கூரை பறந்துவிட்டன.

வர்தா புயல் சென்னை அருகே கரையை கடந்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. காற்று மணிக்கு 108 கிலோமீட்டர் வேகத்தில் வீசுகிறது.

Railway station roof blown away by wind in Chennai

காற்றின் வேகத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். பேய்க்காற்று மற்றும் கனமழயைால் சென்னையில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் சென்னை வரும் ரயில்களும் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடற்கரை ரயில் நிலையத்தின் கூரை காற்றில் பறந்துவிட்டது. காற்றின் வேகமும் அதனால் ஏற்படும் சேதங்களும் மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இதற்கிடையே புயல் கரையை கடந்தாலும் இரவு 7 மணி வரை அதன் தாக்கம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

English summary
Roof of a Chennai beach railway station has been blown away by the strong winds that is attacking the city.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X