For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செங்கோட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Google Oneindia Tamil News

செங்கோட்டை: செங்கோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே ஊழியர்கள் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் 7 ஆவது சம்பளக் கமிஷன் அறிக்கையில் உள்ள குளறுபாடுகளை நீக்க வேண்டும்,புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும், பழைய பென்ஷனை தொடரவேண்டும்,ஓய்வு ஊதியமாக சம்பத்தில் 60 சதவிகிதம் வழங்கிட வேண்டும்,ஆண்டு இன்கிரிமென்ட் 5சதவிகிதத்தை ஜனவரி,ஜூலை யில் வழங்கிட வேண்டும்.

railway workers protest in Sengottai

குறைந்தப் பட்சம் ஊழியமாக 1.7.2015.விலைவாசி அடிப்படையில் 26ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழங்க வலியுறுத்தி செங்கோட்டை ரயில் நிலைய வளாகத்தில் பயணசீட்டு கவுன்சில் சேர்மன் சுலைமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் கல்யாணிப் பாண்டியன் முன்னிலை வகித்தார்.தென்னக ரயில்வே மதுரைக் கோட்ட தலைவர் ராமசுப்பு ஆர்ப்பாட்டம் குறித்து விளக்க உரை நிகழ்த்தினார். பொருளாளர் பழனி வேல்,உதவி தலைவர் சாபு, உதவி செயலாளர்கள் குமரேசன்,சந்திரகுமார்,கனகராஜ், சுகுமார், அணி செயலாளர் குமாரசாமி,உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் குறித்து பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்காசி,சங்கரன் கோவில்,அம்பை,ஆரியங்காவு,புனலூர்,தென்மலை உள்ளிட்ட பல்வேறு ரயில்நிலைய பணியாளர்கள் ஆண்களும்,பெண்களும் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

English summary
Railway workers protest in Sengottai for various demands.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X