For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரயில்களில் தூங்கும் நேரத்தை குறைக்கும் நிர்வாகம்... முன்பதிவு பெட்டிகளை அதிகரித்தால் என்ன?

ரயில்களில் தூங்கும் நேரத்தை குறைக்கும் ரயில்வே நிர்வாகம், முன்பதிவு பெட்டிகளை அதிகரித்தால் பயனுள்ளதாகமே இருக்குமே என்கின்றனர் பயணிகள்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: ரயில்களில் உட்காருவதற்கு இடப்படும் சண்டையை தவிர்க்க முன்பதிவு பெட்டிகளில் பயணிகள் தூங்கும் நேரத்தை குறைக்கும் ரயில்வே நிர்வாகம் கூடுதலாக முன்பதிவு பெட்டிகளை இயக்கினால் என்ன தவறு என்கின்றனர் பயணிகள்.

நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகள், பேருந்துகளை காட்டிலும் ரயில் பயணங்களையே விரும்புவர். அப்போதுதான் அலுப்பு தெரியாமல் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் இரவு முழுவதும் தூங்கிக் கொண்டு செல்லலாம் என்பதால் ரயில்களில் பயணம் செய்ய பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

பார்ப்பதற்கு ஈஸி பயணமாக காட்சியளித்தாலும் முன்பதிவு பெட்டிகளில் முண்டியடித்துக் கொண்டு மூட்டை முடிச்சுகளையும், குழந்தை குட்டிகளையும் பிடித்துக் கொண்டு ஏறுவதுதான் கொடுமையிலும் கொடுமை. இதை பெரும்பாலானோர் அனுபவித்து இருப்பர்.

சீசன் நாள்களில்...

சீசன் நாள்களில்...

சாதாரண நாள்களில் கூட பரவாயில்லை ஆனால் விடுமுறை நாள்களிலும், சீசன் நாள்களிலும் சொல்லவே வேண்டாம். குறிப்பிட்ட ஒரு ரயிலானது அந்த ரயில் நிலையத்தை காலை 7 மணிக்கு வந்தடையும் என்று வைத்துக் கொண்டால், அதில் முன்பதிவில் இடம் பிடிக்க பயணிகள் காலை 5 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருப்பர்.

ரயில்வே போலீஸ்

ரயில்வே போலீஸ்

ரயில் வந்தவுடன் இன்னும் கூட்டம் முண்டியடிக்கும் என்பதால் ரயில்வே போலீஸார் அந்த இடத்துக்கு வந்து கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி ரயிலில் ஏற்றிவிடுவர். அதிலும் இடம் பிடிப்பதில் பெரிய சண்டை நடக்கும். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பெர்த்துகளில் சிலர் பயணம் தூரம் முழுவதும் தூங்கிக் கொண்டே வருவர்.

அடிக்கடி சண்டை

அடிக்கடி சண்டை

பயணிகள் பெர்த்துகளில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே தூங்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் அந்த பெர்த்துகளில் பயணிகள் அமர்ந்து கொண்டு பயணம் செய்வர். இதை சிலர் அனுமதித்தாலும், பெரும்பாலானோர் அடாவடியாக எந்நேரமும் தூங்கிக் கொண்டே வருவர். இதனால் அங்கு பெரிய பஞ்சாயத்தே நடக்கும்.

தூங்கும் நேரத்தை குறைத்தல்

தூங்கும் நேரத்தை குறைத்தல்

இதனால் யோசித்த ரயில்வே நிர்வாகம் இந்த சண்டை சச்சரவுகளை போக்க ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் தூங்கும் நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்துவிட்டது. அதாவது இனி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரைதான் தூங்கும் நேரம். இது பயணிகளுக்கு ஒன்றும் பயனளிக்க போவதில்லை. அடாவடி அடிப்பவர்கள் அடிக்கத்தான் செய்வர்.

பயணிகளைத்தான் கஷ்டப்படுத்தனுமா?

பயணிகளைத்தான் கஷ்டப்படுத்தனுமா?

பெர்த்துகளை முன்பதிவு செய்ய ரயில்வே நிர்வாகம் எப்போது அறிவிக்கும் என்று கண் கொட்டாமல் பார்த்து அறிவுத்தவுடன் டப டபவென பதிவு செய்து அது கன்பார்ம் ஆகுமோ இல்லையோ என்ற கவலையில் இருந்து ஏதோ கடைசி நேரத்தில் கன்பார்ம் ஆகும். அந்த சந்தோஷத்தில் சென்றால் ரயிலில் இடம் பிடிக்க பெரிய அதகளமாகிறது.

ரயில் பெட்டியை கூட்டினார் என்ன ?

ரயில் பெட்டியை கூட்டினார் என்ன ?

ரயிலில் கூட்டத்தை குறைக்க அதை செய்கிறேன், இதை செய்கிறேன் என்பதற்கு பதிலாக முண்டியடித்து ஏறுவதை தடுக்கும் வகையில் ரயில்களில் முன்பதிவு பெட்டிகளை கூட்டினால் என்ன. முண்டியடித்து போனாலும் ஒரே காசுதான். அதற்கு மக்களுக்கு பயன்படும் வகையில் அவர்களின் கஷ்டத்தை போக்கும் வகையில் முன்பதிவு பெட்டிகளை அதிகரித்தால் நன்றாக இருக்குமே. நஷ்டத்தில் இயங்குவதாக கூறும் ரயில்வேக்கும் வருவாய் கிடைக்கும். எல்லாவற்றையும் பயணிகள் தலையில் திணிக்காமல் பயணிகளின் நலனில் ரயில்வே நிர்வாகம் அக்கறை காட்ட வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோள்.

English summary
Railways are continuously giving trouble to reservation coach passengers. Instead they can increase the reservation coaches.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X