For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லை, குமரி மாவட்டங்களில் கொட்டும் கனமழை... அருவிகளில் ஆர்பரிக்கும் வெள்ளம்

நெல்லை, குமரி மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மழையால் அருவிகளில் வெள்ளம் ஆர்பரித்து கொட்டுகிறது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை மழை-நார்வே வானிலை ஆய்வு மையம் என்ன சொல்லுது?- வீடியோ

    திருநெல்வேலி: பலத்த மழையால் குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவியில் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் குளிக்க 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அம்பாசமுத்திரம் மணிமுத்தாறு அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக 6வது நாளாக சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சுற்றுலா பயணிகளுக்கு தடை

    சுற்றுலா பயணிகளுக்கு தடை

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவியில் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.

    வெள்ளத்தில் பாலம் உடைப்பு

    வெள்ளத்தில் பாலம் உடைப்பு

    நெல்லையில் நேற்று, கனமழை கொட்டியதால் நாங்குநேரியான் கால்வாய், உப்பாறு, பச்சையாறுகளில் இரு கரைகளையும் தொட்டப்படி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நாங்குநேரியான் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிதம்பரபுரம், மூங்கிலடி, கருவேலங்குளம் பாலங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    வெள்ளப்பெருக்கு

    வெள்ளப்பெருக்கு

    பச்சையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கீழப்பத்தை-மேலவடகரை பாலமும், வடமலைசமுத்திரம்-பத்மநேரி பாலமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதுபோல நம்பியாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மகிழடியில் தரைப்பாலம் உடைந்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் மழை

    மேற்கு தொடர்ச்சி மலையில் மழை

    குமரி மாவட்டத்தில் கொட்டும் கனமழையால் திற்பரப்பு அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் பலத்த மழையால் தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளி அருவி உள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுருளி அருவியில் குளிக்க வனத்துறை நேற்று தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Western Ghats triggered flash floods in all waterfalls at Courtallam and significant influx of water into the prime reservoirs of Nellai district on Monday.Tourists not allowed to take bath in the Falls for the second day.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X