For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாலத்தீவு அருகே நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

மாலத்தீவு அருகே புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: மாலத்தீவு அருகே புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

தென்மேற்கு வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி இருக்கிறது. இந்த சின்னம் கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சில மீனவர்கள் மீன்பிடிக்க சென்று இருக்கிறார்கள். இவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வலுவானது

வலுவானது

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாலத்தீவில் இருந்து 310 கி.மீ தொலைவில் உள்ளது .காற்றழுத்த தாழ்வுமண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வாய்ப்பு குறைவு என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை.

எத்தனை நாள்

எத்தனை நாள்

ஆனாலும் காற்று இதுவரை இல்லாத வகையில் அசாதாரண வகையில் நகர்கிறது. இதனால் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்கள்

கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் குறித்து பாஜக எம்.பி பொன். ராதாகிருஷ்ணன் ''கனமழை,காற்று ஆகியவைகளால் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு தொடர்ந்து விவரங்களை அறிந்து வருகிறேன். இதுவரை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 1079 படகுகள் திரும்பியுள்ளது. 583 விசைப்படகுகளில் 531 படகுகள் வந்துள்ளது'' என்றுள்ளார்.

எங்கே

மேலும் ''லட்சத்தீவு,கோவா பகுதிகளில் கரை ஒதுங்கியிருப்பதாகவும் மீதமுள்ள படகுகளில் சென்ற மீனவர்கள் மஹாராஷ்டிரா, கோவா பகுதிகளில் மீன்பிடிக்க சென்றிருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. தற்போது காற்று, மழை குறிந்திருப்பதால் அச்சப்பட தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்'' என்றும் அவர்களின் நிலை குறித்து குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
Rain is likely to occur in Tamilnadu coastal areas for next two days. The new storm in Indian ocean may cause heavy rain for two days in Coastal areas of Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X