For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்க சர்டிபிகேட் வெள்ளத்தில போயிருச்சா...: சிறப்பு முகாம்ல போய் உடனே அப்ளிகேசன் கொடுங்க

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த ஆவணங்களுக்கு நகல் சான்றிதழ்கள் பெற இன்று முதல் 15 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கனமழையால் பொதுமக்கள் இழந்துள்ள நிலம் மற்றும் வீட்டுமனைப் பட்டா, கல்விச் சான்றிதழ், காஸ் இணைப்புப் புத்தகம், ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், நிலம், வீட்டு கிரயப் பத்திரம், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவுசான்று உள்ளிட்ட சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை திரும்ப வழங்கும் வகையில், சிறப்பு முகாம்கள் இன்று முதல் முதல் நடக்கிறது. வெள்ளத்தில் சான்றிதழ்கள், ஆவணங்களை இழந்தவர்கள் முகாம்களில் நகல் கேட்டு விண்ணப்பம் அளிக்கலாம். விண்ணப்பித்த ஒரு வாரத்திற்குள் நகல்கள் இலவசமாக அளிக்கப்படும்.

Rain lost:Certificate issuance camp

சென்னையில் முகாம்கள் நடக்கும் இடங்களின் விபரம்,

•473, திருவொற்றியூர் நெடுஞ்சாலை (அப்பல்லோ மருத்துவமனை அருகில்), தண்டையார்பேட்டை
•3, ராஜா முத்தையா சாலை, பெரியமேடு (நேரு ஸ்டேடியம் அருகில்), புரசைவாக்கம்
•3, பெரம்பூர் நெடுஞ்சாலை, பெரம்பூர் ரயில் நிலையம் அருகில், பெரம்பூர்
•25, யுனைடெட் இந்தியா காலனி, முதல் மெயின் ரோடு, அயனாவரம் *
• 88, மேயர் ராமநாதன் சாலை, சேத்துப்பட்டு
• 4, மேற்கு மாடவீதி, கோயம்பேடு, (குறுங்காலீ சுவரர் கோவில் அருகில்)
• புதிய எண்.1, பழைய எண்.2, பாரதிதாசன் காலனி, கே.கே.நகர்
• 370, அண்ணாசாலை, சைதாப்பேட்டை
• 28, பசும்பொன் முத்துராமலிங்கம் சாலை, ராஜா அண்ணாமலைபுரம்
• ஐ.ஆர்.டி. வளாகம், 100 அடி சாலை, தரமணி

ஆட்சியர் அறிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி விடுத்துள்ள அறிக்கை: காஞ்சிபுரம் குறுவட்டத்துக்கு 14 முதல் 19ம் தேதி வரை அண்ணா அரங்கத்திலும் சிறுகாவேரிபாக்கம் குறுவட்டம் 20, 21 தேதிகளில் வட்டார வளர்ச்சி அலு வலகத்திலும் திருப்புட்குழி குறுவட்டம் 22, 23 தேதிகளில் தாமல் அண்ணா சமுதாயகூடத்திலும் நடைபெறுகிறது. சிட்டியம்பாக்கம், பரந்தூர் குறுவட்டம் 24, 25 தேதிகளில் பரந்தூர் சமுதாயகூடத்திலும் கோவிந்தவாடி குறு வட்டம் 26, 27 தேதிகளில் கோவிந்தவாடி சமுதாயகூடத்திலும் வாலாஜாபாத் வட் டத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலகத் திலும் உத்திரமேரூர் வட்டத்துக்கு அதே பகுதியில் உள்ள சக்தி திருமண மண் டபத்திலும் 14 முதல் 27ம் தேதிவரை நடக்கிறது.

ஸ்ரீபெரும்புதூர் வட்டம்

ஸ்ரீபெரும்புதூர் குறுவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகத்திலும் வரதராஜ புரம், படப்பை குறுவட்டத்தில் முடிச்சூர் சிஎஸ்ஐ தேவாலயத்திலும் குன்றத்தூர் குறுவட்டத்தில் அங்குள்ள சமுதாய கூடத்திலும் மாங்காடு குறுவட்டத்தில் கொளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி யிலும் வரும் 14 முதல் 20ம் தேதி வரை நடக்கிறது.

செங்கல்பட்டு வட்டம்

ஊரப்பாக்கம் சமுதாயக்கூடத்தில் வரும் 14, 15 தேதிகளிலும் மண்ணிவாக்கம் சமுதாயகூடத்தில் 16,17 தேதிகளிலும் வண்டலூரில் விஏஓ அலுவலகத்தில் 18, 19 தேதிகளிலும் நெடுங்குன்றத்தில் விஏஓ அலுவலகத்தில் 20, 21 தேதிகளிலும் வண்டலூர் குறுவட்டத்துக்கு அங்குள்ள சமுதாயக் கூடத்தில் வரும் 22, 23 தேதிகளிலும் நந்திரவம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி அலுவலகத்தில் 24,25 தேதி களிலும் கூடுவாஞ்சேரி குறுவட்டம் பேரூராட்சி பகுதி நீங்கலாக உள்ள பகுதிகளுக்கு வரும் 26, 27 தேதிகளில் ஆர்ஐ அலுவலகத்திலும் காட்டாங்கொளத்தூர் குறுவட்டத்துக்கு வரும் 14, 15 தேதிகளில் மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்திலும் சிங்கபெருமாள்கோவில் ஆர்ஐ அலுவலகத்தில் 16,17 தேதிகளிலும் ஆப்பூர் குறுவட்டத்துக்கு விஏஓ அலுவலகத்தில் 18, 19 தேதிகளிலும் பாலூர் குறுவட்டத்துக்கு ஆர்ஐ அலுவலகத்தில் 20, 21 தேதிகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது.

செங்கல்பட்டு நகரம்

செங்கல்பட்டு நகரம் 22, 23 தேதிகளில் நகராட்சி அலுவலகத்திலும் செங்கல்பட்டு குறுவட்டம் 24, 25 தேதிகளில் செங்கல்பட்டு ஆர்ஐ அலுவலகத்திலும். திம்மாவரம் ஊராட்சிக்கு விஏஓ அலுவலகத்தில் 26,27 தேதிகளிலும் முகாம் நடக்கிறது.

திருப்போரூர் வட்டம்

திருப்போரூர் குறுவட்டம் 14,15ம் தேதிகளில் ஆர்ஐ அலுவலகத்திலும் பையனூர் குறுவட்டத்தில் அங்குள்ள சமுதாயக் கூடத்தில் 16,17 தேதிகளிலும் கேளம்பாக்கம் குறுவட்டத்துக்கு ஆர்ஐ அலுவலகத்தில் 18, 19 தேதிகளிலும் மானம்பதி, கரும்பாக்கம், நெல்லிக்குப்பம், மாம்பாக்கம் ஆகிய குறுவட்டங்களில் முறையே 20 முதல் 27ம் தேதிவரை தனியார் திருமண மண்டபங்களிலும் முகாம் நடைபெறுகிறது.

திருக்கழுக்குன்றம் வட்டம்

திருக்கழுக்குன்றம், புதுப்பட்டினம், நெரும்பூர், பொன்விளைந்த களத்தூர், மாமல்லபுரம் ஆகிய குறுவட்டம் மற்றும் எடையாத்தூர், இரும்புலிச்சேரிக்கு டிச. 14 முதல் 27-ம் தேதிவரை கிராம நிர்வாக அலுவலகங்களில் நடைபெறுகிறது.

தாம்பரம் வட்டம்

முடிச்சூர் பகுதிக்கு 14,15 தேதிகளில் ஊராட்சி அலுவலகத்திலும் பெருங்களத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் 16,17 தேதிகளிலும் செம்பாக்கம்,ராஜகீழ்பாக்கம், கவுரிவாக்கம் பகுதிக்கு 18, 19 தேதிகளில் செம்பாக்கம் நகராட்சி அலுவலகத்திலும்
தாம்பரம் நகராட்சி, சேலையூர், இரும்புலியூர்,கடப்பேரி, புலிக்கொரடு பகுதிகளிக்கு 20, 21 தேதிகளில் டிஜிபி திருமண மண்டபத்திலும் சிட்லபாக்கம் குறுவட்டம், பீர்க்கண்கரணை பகுதிக ளுக்கு 22 முதல் 25ம் தேதிவரை பேரூராட்சி அலுவலகத்திலும் மாடம்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் 26, 27 தேதிகளிலும் திருநீர்மலைக்கு பேரூராட்சி அலுவலகத்தில் 14, 15 தேதிகளிலும் அனகாபுத்தூர், பொழிச்சலூர், பம்பல், நந்தம்பாக்கம் பர்மா காலனி, மீனம்பாக்கம் பகுதிகளில் முறையே 16 முதல் 25ம் தேதிவரை அந்தந்த பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் நடை பெறுகிறது.

சோழிங்கநல்லூர்

சோழிங்கநல்லூர் வட்டத்துக்கு ஊராட்சி அலுவலகம் மற்றும் ஈஞ்சம்பாக்கம் புயல்மையத்திலும் மதுராந்தகம் வட்டம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகத்திலும் செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் வரும்14 முதல் 25ம் தேதிவரை சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. இந்த முகாம்களில் பொதுமக்களின் விண்ணப்பத்தின்பேரில் ஒரு வார காலத்தில் நகல் ஆவணங்களை இலவச மாக வழங்குவார்கள் என ஆட்சியர் தெரி வித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூரில் மழையால் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு புதிய சான்றிதழ்களை வழங்குவதற்கான சிறப்பு முகாம் இன்று தொடங்கி, 28ம் தேதி வரை நடைபெறுகிறது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 11 வட்டங்களில், 25 மையங்களில் இன்று முதல் ( 28ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ள இடங்கள்

திருவள்ளூர் வட்டம்

செயின்ட் ஆனிஸ் பள்ளி, திருவள்ளூர். அரசு மேல் நிலைப் பள்ளி, வெங்கல். வட்டார வளர்ச்சி அலுவலகம், கடம்பத்தூர்.
பூவிருந்தவல்லி வட்டம்: அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காமராஜர் நகர், ஆவடி. தாசர் மேல்நிலைப் பள்ளி, திரு நின்றவூர். வட்டாட்சியர் அலுவலகம், பூவிருந்தவல்லி.

ஊத்துக்கோட்டை- திருத்தணி

வட்டாட்சியர் அலுவலகம், ஊத்துக்கோட்டை. வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம், பெரிய பாளையம். வட்டாட்சியர் அலுவலகம், திருத்தணி. வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம், திருவாலங்காடு. வட்டாட்சியர் அலுவலகம், பள்ளிப்பட்டு. வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம், ஆர்.கே.பேட்டை.

பொன்னேரி வட்டம்

குழந்தை ஏசு தேவாலயம், விச்சூர். பி.யு.ஈ. பள்ளி, தத்தமஞ்சி. வட்டார வளர்ச்சி அலுவலர், சோழவரம். எல்.என்.ஜி. கல்லூரி, பொன்னேரி. கும்மிடிப்பூண்டி வட்டம்: வட்டாட்சியர் அலுவலகம், கும்மிடிப்பூண்டி.

அம்பத்தூர் வட்டம்

அரசு மேல்நிலைப் பள்ளி, பாடிக்குப்பம், பாடி. அரசு மேல்நிலைப் பள்ளி, சோழம்பேடு, திருமுல்லைவாயல்.
மாதவரம் வட்டம்: அரசு மேல்நிலைப் பள்ளி, மாதவரம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செங்குன்றம்.
திருவொற்றியூர் வட்டம்: வெள்ளஞ் செட்டி மேல்நிலைப் பள்ளி, திருவொற்றியூர். அரசு மேல்நிலைப் பள்ளி, மணலி.
மதுரவாயல் வட்டம்: அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயல். சமுதாயக் கூடம், அயப்பாக்கம்.

இந்த முகாம்களில் தமிழக அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்களின் அலுவலர்கள் கலந்து கொண்டு, மக்க ளிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற்று ஒரு வார காலத்துக்குள் நகல் ஆவணங்களை கட்டணமின்றி வழங்க உள்ளனர்.

English summary
A certificate issuance camp for the benefit of students who lost their certificates in the recent floods will be held from today.Special camps to give duplicate certificates and documents to the people of flood affected Chennai, Cuddalore, Kancheepuram and Thiruvallur districts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X