For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொத்துக்கிட்டு ஊத்திய வானம்... மகிழ்ச்சியில் தேனி, கம்பம் மக்கள்! - வீடியோ

நேற்று வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத்தால் தேனி, கம்பம், கூடலூர், ஊட்டி ஆகிய ஊர்களில் மழை பெய்துள்ளது. கடந்த மூன்று வாரங்களாக கடும் வெயிலில் அவதிப்பட்ட மக்கள் இந்த மழையால் சந்தோஷமடைந்துள்ளனர்

By Suganthi
Google Oneindia Tamil News

தேனி: வங்கக்கடலில் உருவான குறைவான காற்றழுத்த மண்டலத்தால் தேனி, கம்பம், கூடலூர் மற்றும் ஊட்டியில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் அங்கு மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வங்கக் கடலில் குறைவான காற்றழுத்தம் உருவானது. அது புயலாக மாறி தமிழகம் முழுவதும் பலத்த மழை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த புயல் இன்று மியான்மரில் கரையை கடக்கவுள்ளது.

Rain in Theni and people happy

ஆனால், வங்கக் கடலில் உருவான குறைவான காற்றழுத்தத்தால் தமிழகத்தின் தென்பகுதியில் நல்ல மழை பெய்துள்ளது. ஏப்ரல் முதல் வாரத்திலிலேயே வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தொட்டு மக்களை அச்சுறுத்தியது.

இந்நிலையில், நேற்று தேனி, கம்பம், கூடலூர், ஊட்டி ஆகிய பகுதிகளில் கனத்த மழை பெய்தது. இதனால் கடந்த மூன்று வாரங்களாக கடும் வெயிலால் பாதிக்கப்படிருந்த மக்கள் மழையால் சந்தோஷமடைந்தனர். மேலும், இந்த மழையால் சிறிதளவாவது தண்ணீர் பஞ்சம் தீரும் என்று மக்கள் நம்பிக்கையில் உள்ளனர்.

English summary
Due to the lowest pressure formed in Bay of bengal, Theni, Kambam kudalore and OOty got good rain yesterday. People are very happy, after a heavy summer got rain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X